/* */

நார்ச்சத்து உள்ள உணவை சாப்பிடுங்க! நலமாய் வாழுங்க.

Fibre Rich Foods in Tamil-செரிமானம் எளிதாகவும், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்வது உடலுக்கு நல்லது.

HIGHLIGHTS

Fibre Rich Foods in Tamil
X

Fibre Rich Foods in Tamil

Fibre Rich Foods in Tamil-நார்ச்சத்து என்பது நம் உடலினால் செரிக்க முடியாத ஒரு வகை கார்போஹைட்ரேட். அவை செரிமானம் ஆகாமல் முழுவதுமாக மலம் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

நார்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் மிகுந்து காணப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தினமும் சாப்பிடுவதால், இதய நோய்கள், மூலநோய், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க முடியும். மேலும், நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.

தினமும் நமது உடலுக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவை. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் தினமும் எடுத்துக் கொள்வதில்லை. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் பல நோய்களை தடுக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன.ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து மற்றொன்று கரையாத நார்ச்சத்து.

கரையும் நார்ச்சத்து நீரில் கரைகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வயிற்றில் ஜெல்லாக மாறி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுகிறது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. நார்ச்சத்துக்கள் பற்றாக்குறை மலச்சிக்கலுக்கும் வழி வகுக்கும்.

கரையாத நார்ச்சத்து நீரில் கரைவதில்லை. இது, குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. கழிவின் எடையை அதிகரிக்கச் செய்து, செரிமான மண்டலத்தில் இருக்கும் கால அளவைக் குறைக்கிறது. நார்ச்சத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால்தான் குடலின் இயக்கம், செரிக்கும் தன்மை எளிதாக நடைபெற்று கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

நார்ச்சத்து குறைந்த உணவு உட்கொள்ளும்போது, உணவு மலக்குடலிலே அதிக நேரம் கழிவு தங்குவதால், கழிவில் இருந்து நைட்ரஜன் உருவாகி, மலக்குடல் செல்களைப் பாதிக்கும். இதனால் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுவே நார்ச்சத்து உள்ள உணவாக இருந்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியா, நார்ச்சத்தை புளிக்கச் செய்து செல்களுக்கு தேவையான ஆற்றலாக மாறிவிடுகிறது. இதனால், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது.

நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் சிலவற்றை இங்கு நாம் காணலாம்.

ஆப்பிள்

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் ஆப்பிள் பழத்தில் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆப்பிளில் பெரும்பாலான நார்ச்சத்துக்கள் தோலில் உள்ளதால் ஆப்பிளை தோலுரிக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாப் பழம்

100 கிராம் கொய்யாப் பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 25% உள்ளது. கொய்யா பழங்களில் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களும் மிக அதிகமாக உள்ளன.

வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு மலிவாக கிடைக்க கூடிய நார்ச்சத்து நிறைந்த பழம். 100 கிராம் வாழைப்பழத்தில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும், வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் அத்திப்பழத்தில் 2.9 கிராம் நார்ச்சத்து உள்ளது.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. 100 கிராம் சுண்டலில் 17 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது தினசரி உடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் 68% ஆகும்.

பாசிப்பயறு

கொண்டைக்கடலைப் போல, பாசிப்பயிரிலும் நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. 100 கிராம் பாசிப்பயறில் 16 கிராம் நார்ச்சத்து (64%) உள்ளது.

கேரட், காலிஃப்ளவர்

கேரட் & காலிஃப்ளவர் இரண்டுமே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள். 100 கிராம் கேரட்டில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது 100 கிராம் காலிஃப்ளவரில் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது

உளுந்து

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்த்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் உளுத்தம் பருப்பில் 18.3 கிராம் நார்ச்சத்து உள்ளது (48%).

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் நிறைய தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், இது உடல் எடையை குறைப்பதற்கும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. 100 கிராம் பாதாம் பருப்பில், 13 கிராம் நார்ச்சத்துள்ளது (46%).

திணை

1 கப் திணையில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. திணை பொதுவாகவே, நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த உணவாகும். சிறு தானியம் உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் என்பது அனைவருக்கு தெரியும். ஆனால், அதன் சுவை பிடிக்காததால், அதனை யாரும் உண்ண விரும்புவதில்லை. ஆனால், சுவை மிகுந்த உணவாக மாற்றி சாப்பிட்டால் நார்ச்சத்துடன் சேர்த்து 8 கிராம் அளவிற்கு புரதச்சத்தும் கிடைக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 4:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு