/* */

டேட்டிங் என்றால் என்ன..? டேட்டிங் நம்ம கலாசாரத்துக்கு சரியானதா? நீங்களே முடிவு எடுங்க..!

Love Dating Meaning in Tamil-டேட்டிங் என்பது ஒரு ஆணும்,பெண்ணும் தங்களை புரிந்துகொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் பயிற்சிப்பட்டறை.

HIGHLIGHTS

Love Dating Meaning in Tamil
X

Love Dating Meaning in Tamil

டேட்டிங் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

Love Dating Meaning in Tamil-டேட்டிங் என்பது காதல் உறவுகளின் ஒரு நிலையாகும். இதில் ஒருவருக்கு ஒருவர் பிடித்த ஆணும் பெண்ணும் ஒன்றாக காதல் என்னும் செயலில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் எதிர்காலத்தில் நெருக்கமான உறவில் ஒரு பங்காளியாக ஒருவருக்கொருவர் பொருத்தமாக வாழ்வதற்கு மதிப்பீடு செய்துகொள்ளும் நோக்கத்துடன் இணைந்து இருப்பதாகும்.

சுருக்கமாக சொன்னால், பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையைத் தொடர்வோம். இல்லைன்னா போய்க்கிட்டே இருப்போம் என்கிற பாலிசி.

புரிதல்

ஒரு ஆண், ஒரு பெண் இணைந்து வாழ்வதுதான் தாம்பத்ய வாழ்க்கை. இதில் ஒருவருக்கொருவர் மனதளவிலும், உடலளவிலும் பொருத்தமாக வாழ்வதை புரிந்துகொள்ளும் நிலையே வாழ்க்கை. அதனால், சிலர் புரிந்துகொண்டு வாழ்வதில் தவறில்லை. அதற்கு ஒரு ஒத்திகை பார்ப்போம் என்பதுதான் டேட்டிங்.

அப்படி புரிந்துகொள்வதற்காக வெளிநாடு அல்லது ஏதாவது ஒரு ரிசார்ட்டிற்குச் சென்று ஓய்வு நாளை கழிப்பார்கள். அவ்வாறு வாழும்போது ஒரு கணவன் மனைவியாகவே வாழ்வார்கள். எல்லா வகையிலும் இணக்கமாக வாழ முடிகிறதா? ஒருவருக்கு ஒருவர் பொருத்தமானவராக இருக்க முடியுமா என்பன போன்ற ஒரு வாழ்க்கை மதிப்பீட்டிற்கான 'கள ஆய்வு' என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

சமூகப் பேச்சு

என்னதான் இப்படி வாழ்ந்துபார்த்து வாழ்க்கையைத் தொடர்ந்தாலும் அங்கு உண்மையான அன்பு,காதல்,இணக்கம்,சமாதானம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்ற அடிப்படை குணாதிசயங்கள் இருந்தால் மட்டுமே அது நீடித்த வாழ்க்கையாக இருக்கும்.

சரி இதில் இன்னொரு கேள்வியும் எழலாம். அதாவது வசதி இருப்பவர்கள் டேட்டிங் செல்வார்கள். வாழ்ந்து பார்ப்பார்கள். வேண்டாம் என்றால் ஒதுங்கிவிடுவார்கள். அது அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால், சராசரி நடுத்தர மக்கள் இப்படி டேட்டிங் சென்று வாழ்க்கையை முடிவு செய்ய முடியுமா..? இந்த சமூகம்தான் விட்டுவைக்குமா..? நன்றாக யோசித்துப்பாருங்கள். ஒரு சராசரி பெண் டேட்டிங் போகிறேன் என்று ஒருமாதம் வாழ்ந்துவிட்டு, வேண்டாம் என்று வந்தால் இந்த சமூகம் என்னென்ன பேசும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

இந்த டேட்டிங் என்பதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். அதாவது பணக்காரர்களின் பகட்டு விளையாட்டு. வெளிநாட்டுக்காரர்களுக்கு, அவர்களின் கலாச்சாரத்துக்கு இந்த டேட்டிங் சமாச்சாரம் ஓகே. நமக்கு..? ஏங்க டேட்டிங் போறிங்களா..?

அன்பு செய்யுங்கள்

எப்படியோ டேட்டிங் போகும்போது உண்மையாக நடந்துகொள்ளுங்கள். உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள். மனம்விட்டு பேசுங்கள். ஒருவருக்கு ஒருவர் எதையும் மறைக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகள் மற்றும் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். விட்டுக்கொடுத்தல் ஒன்றே பிரிவினைக் கருத்துகளுக்கு முடிவுக்கட்டும். நான் என்பதை மறந்து நாம் என்னும் எண்ணம் வருதல் வேண்டும்.

நம்பிக்கை

புரிதலில், நம்பிக்கை ஒன்றே மரத்தின் ஆழமான வேர் போன்றது. அந்த நம்பிக்கை உண்மையான அன்பின் வெளிப்பாட்டில் மட்டுமே உருவாகமுடியும். ஒரு தாயை ஒரு மகனும், ஒரு தந்தையை ஒரு மக்களும் உண்மையாக நேசித்தால் அவர்களுக்கு உண்மை அன்பின் வெளிப்பாடு தாராளமாக இருக்கும்.

உண்மையான காதலில் ஒரு ஆணுக்கு காதலி என்பவள் இன்னொரு தாயாக தெரிவாள். அதேபோல ஒரு பெண்ணுக்கு தந்து காதலன் இன்னொரு தந்தையாக தெரிவான். இது அன்புக்கு மட்டுமான இலக்கண வரம்பு.

காமம் மட்டுமே வாழ்க்கை அல்ல

வாழ்க்கையில் காமம் மட்டுமே வாழ்க்கையல்ல. தொடுதல், கட்டி அணைத்தல், முத்தமிடுதல் இவையின் மூலமாக அன்யோன்யம் ஏற்படவேண்டும். ஈருயிர் என்பது ஓருயிராகத் தோன்றுதல் வேண்டும். அப்படி வாழ்ந்தால் மட்டுமே, கணவனுக்கு முடியவில்லை e என்றால் மனைவிக்குத் துடிக்கும். மனைவிக்கு முடியவில்லை என்றால் கணவனுக்குத் துடிக்கும்.

ஒருவரை விட்டு ஒருவர் வாழமுடியாத நிலை ஏற்பட வேண்டும். சிறிது நேரம் காணாமல் கூட எங்கே..எங்கே என்று கண்கள் தேடவேண்டும். இது உண்மை என்றால் இறுதிவரை அந்த வாழ்க்கை இனிமையானதாகத்தான் இருக்கும்.

திருமணத்துக்கு பிந்தைய டேட்டிங்

இந்த நிலை உங்களுக்குள் வந்துவிட்டால் டேட்டிங் முடிச்சி வந்து கல்யாணம் பண்ணிக்கலாம். வழக்கமாக பெற்றோர் பார்த்து திருமணம் செய்பவர்களை ஹனிமூன் அனுப்புவார்கள். இதுகூட ஒருவகை டேட்டிங் தான். ஆனால், இது திருமணத்துக்கு பிந்தைய டேட்டிங், அவ்ளோதான். ஆணோ அல்லது பெண்ணோ புரிஞ்சிக்கறத்துக்கு நல்ல மனசு இருந்தா போதுங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் லவ் பண்ணுங்க. வாழ்க்கை நல்லா இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 6:53 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு