/* */

ஏங்க... 2 நாள் குளிக்காமல் இருந்தால் உங்க உடம்பு என்னாகும் தெரியுமா? முதல்ல இதைப் படிச்சு பாருங்க...

மனிதர்களாக பிறந்தவர்கள் உடல் துாய்மையை மேற்கொள்வது மிக மிக அவசியம். அப்போதுதான் உடம்பானது ஆரோக்யமாக இருக்கும்.ஆனால் ஒருசிலர் குளிக்காமலேயே காலத்தை ஓட்டுவார்கள். அப்படி இருந்தால் என்ன ஆகும்.. படிச்சு பாருங்க..

HIGHLIGHTS

ஏங்க... 2 நாள் குளிக்காமல் இருந்தால்   உங்க உடம்பு என்னாகும் தெரியுமா?    முதல்ல இதைப் படிச்சு பாருங்க...
X

நாம் நம் உடலின் துாய்மைக்காகவே தினந்தோறும் குளிக்கிறோம். நம் உடலி்லுள்ள வியர்வை , அழுக்குகள் இதனால் வெளியேற்றப்பட்டு சுத்தமாகிறது. ஆனால் ஒரு சிலர் மாத கணக்கில் கூட குளிக்காமல் இருப்பார்கள். அவர்களிடம் அருகே சென்றாலே ஒரு வித வியர்வை நாற்றம் வரும்.

ஆனால் ஒருசிலருக்கு இயற்கையாகவே வியர்வை அதிகம் வரும் என்பதால் இரண்டு முறை குளித்தே ஆக வேண்டும் என குளிப்பார்கள். ஒரு சிலர் கடமைக்காக குளிப்பதும் உண்டு. தினமும் நீங்கள் குளிக்காவிட்டால் என்னென்ன நடக்கும் , ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகள் நடக்காது என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.

நீங்கள் தினமும் குளிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுங்களா? தினம் குளிக்காவிட்டால் உங்களுடைய உடலின் தோலில் ஈரப்பதம் குறைந்துவிடும். தோலின் மேற்புறம் உப்பு திட்டு போன்று உருவாக ஆரம்பித்துவிடும். இதனால் அலர்ஜி போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதுமட்டும் அல்லாமல் உங்கள் உடலில் அதிக தொற்றுகள் ஏற்பட வாய்ப்பாகிவிடும் . இவ்வளவுதாங்க.. அப்புறம் தோல் டாக்டரை தேடித்தான் அலையணும். சரிங்க நீங்க தொடர்ந்து 2 நாட்கள் குளிக்காமல் இருந்தால் உங்கள் உடம்பில் ஆயிரம் வகையிலான பாக்டீரியாக்களினால் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுங்களா?

நாம் தினமும் குளிப்பது எதனால் தெரியுமா? நம் உடலில் உண்டாகும் நோய்க்கிருமிகளை அழிப்பதற்காகவே நாம் தினமும் சோப்பு போட்டு குளிக்கிறோம். இயல்பாகவே நம் உடம்பு தானாகவே ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இது மிகவும் தீய வகையான பாதிப்பினை நமக்கு உண்டாக்கும் பாக்டீரியாக்களின் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.

எப்படி குளிப்பது?

குளிப்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.ஒருசிலர் அரை மணிநேரத்திற்கும் மேலாக நன்கு தேய்த்து குளிப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ உள்ளே சென்றவுடன் 5 நிமிடத்தில் வந்துவிடுவார்கள். காக்கா குளியல்தான். நாம் அன்றாடம் குளிப்பதால் நம் உடலை மேலும் வலுப்படுத்த முடிகிறதுரு. இயற்கையாகவே நாம் குளிக்கும்போது நம் உடலின் அனைத்து உறுப்புகளையும், பகுதிகளையும் சோப் போட்டு நன்கு தேய்த்து ஒருமுறைக்கு இருமுறை குளிக்கவேண்டும். அதுவும் நம் உடம்பின் உறுப்புகளின் இடுக்கு பகுதிகளில்தான் கிருமிகள் தேங்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த இடுக்கு பகுதிகளை நன்கு தேய்த்து குளிப்பது சாலச்சிறந்தது.தன் சுத்தம் என்பது அனைவருக்குமே மிக மிக முக்கியமானது. அதில கவனமா இருங்க.

ஒருசிலர் உடம்பு சரியாகவிட்டால் குளிக்கவே மாட்டார்கள். குளித்தால் சளி பிடித்துவிடும். அது முற்றிலும் தவறு. சரியான பதத்தில் சுடுதண்ணீர் வைத்து அனைத்து பாகங்களையும் நன்கு தேய்த்து குளித்தால் அதிலேயே பாதி உடம்பு சரியாகிவிடும். குளிக்காமல் இருந்து பாருங்களேன். ஏதோ போல் இருக்கும். சோம்பேறித்தனம்தான் அதிகப்படும். அதுவே குளித்து பிரஷ் ஆகி விட்டால் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும்.

ஒரு சிலர் உடலில் வியர்வை வராவிட்டால் குளிக்காமலேயே இருந்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். வியர்வை சுரக்காவிட்டாலும் நம் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளினால் நமக்கு பாதிப்பு ஏற்படும். குளிர்காலமாக இருந்தாலும் தினந்தோறும் குளிப்பது நம் உடல் ஆரோக்யத்தை மேலும் மேம்படுத்தும். அதுவும் கொரோனா காலத்தில் வெளியே சென்று வந்தவுடன் குளித்தவர்கள் நம்மில் எத்தனைபேர்? கொரோனாவ ருவதற்கு முன்பாகவே தமிழக பழைய சினிமாக்களை பாருங்கள் ஒரு முற்றத்தில் பெரிய அண்டா வைத்திருப்பார்கள். கால் அலம்பாமல் யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். எல்லாமே நம் முன்னோர்கள் ஏற்கனவே செய்ததுதாங்க. நாம் நாகரிகம் என்ற பெயரில் அதனை விட்டுவிட்டு பிறகு இப்போது மீண்டும் பிடித்துள்ளோம். அது சரி வீட்டுக்கு முன்னர் எத்தனை பேர் இன்று சாணி தெளிக்கிறாங்க... எதற்கு தெளித்தார்கள். மாட்டின் சாணத்திற்கு நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதால்தான்.



Updated On: 5 Aug 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்