கோவையில் பாஜ ஆபீஸ் திறப்பு விழா 29 ந்தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை

தமிழகத்தில் கோவை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் புதியதாக பாஜ ஆபீஸ் திறப்பு விழா நடக்க உள்ளது. கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் இதனை திறந்து வைக்க 29 ந்தேதி தமிழகம் வருகிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவையில் பாஜ ஆபீஸ் திறப்பு விழா 29 ந்தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை
X

சென்னை:

44 செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சென்னை வந்தார். பின்னர் மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் டில்லி புறப்பட்டு சென்றார்.

ஒரு நாள்இரவு சென்னையில் கவர்னர் மாளிகையில் தங்கிய போது தமிழக பாஜமுக்கிய புள்ளிகளோடு 40 நிமிடத்திற்கு மேலாக ஆலோசனை செய்தார். இந்த நிலையில் இம்மாத இறுதியில் அதாவது 29 ந்தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கோவைக்கு அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வருகை தருகிறார். அவர் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவரின்இந்த பயணமானது பல காரணங்களை கொண்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதியதாக பாஜ அலுவலகங்களை திறக்க அவர் வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கோவையில் கட்டப்பட்ட புதிய பாஜ அலுவலகத்தினை நேரில் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து திருச்சி, விழுப்புரத்தில் கட்டப்பட்ட பாஜ அலுவலகத்தினை வீடியோ கான்பிரன்சில் திறந்து வைப்பார் என தெரிகிறது.

அவர் வருகைக்கான காரணங்கள் இது என்று சொல்லப்பட்டாலும் மற்ற சில காரணங்களும் இந்த பயணத்தில் முக்கியத்துவம் பெறுவதாக தெரிகிறது. அதாவது 2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் குறித்து திட்டமிட உள்ளதால் தமிழக பாஜ தலைவர்கள் 29ந்தேதியன்று அனைவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் வராமல் இருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சி பூசலுக்கு தீர்வு

தமிழகத்தில் இதுநாள் வரை பாஜ மாநில தலைவராக இருந்தவர்கள் இருந்தபோது இந்த அளவிற்கு கோஷ்டி பூசல் இல்லை. ஆனால் தற்போது அண்ணாமலையை தலைவராக நியமித்த பின் பல கோஷ்டிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நிர்வாகிகள் அண்ணாமலையை இன்றளவில் மாநில தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து பாஜ நிர்வாகிகளே சோஷியல் மீடியாவில் விமர்சனம் செய்வது போன்ற விஷயங்களுக்கு முட்டுக்கட்டை போட அமித்ஷா வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது.

எனவே தற்போதைய தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை அனைவரும் ஏற்றுக்கொண்டு முழுமையாக கட்சிக்காக உழைத்து தமிழகத்தில் நடக்க உள்ள 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு முழு வெற்றியை தேடித்தரவேண்டும் எனவும் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் பாஜ காலுான்ற வேண்டும் என்றால் ஜாதி கட்சிகளுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கவேண்டும் எனவும் திட்டமிடப்பட உள்ளதாம். 2024 ம்ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் திமுகவை எப்படி சமாளிப்பது?-எனவும், ஒருசில அமைச்சர்களின் புகார்களை அண்ணாமலை நேரிடையாக உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. தற்போது தமிழகத்தில் அமலாக்கத்துறையின் ரெய்டு தினந்தோறும் நடந்து வருவதால் இந்நிலையில் அமித்ஷா வின் வருகையையும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூட சொல்லலாம்.

மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோடு 2024 ம்ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி வைக்கலாமா? அல்லது சசிகலாவிற்கு ஆதரவு தரலாமா? என்ன முடிவெடுப்பது என்பது குறி்த்தும் அன்றைய தினம் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக மோதலில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கிறோம் என கமலாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

Updated On: 2022-08-06T20:02:36+05:30

Related News