பாஸ்போர்ட் சேவையை எளிய முறையில் ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?

பாஸ்போர்ட் சேவையை எளிய முறையில் ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி? என்பது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாஸ்போர்ட் சேவையை எளிய முறையில் ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?
X

வெளிநாடு செல்பவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் முதன்மையானது பாஸ்போர்ட். ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் பாஸ்போர்ட் பெற வேண்டியது அவசியம். பாஸ்போர்ட் இல்லாமல் எந்த ஒரு வெளிநாட்டிலும் கால் ஊன்ற முடியாது. மத்திய அரசின் வெளியுறவு துறை சார்பில் இயக்கப்படும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. ஒரு காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று பாஸ்போர்ட் பெற்று வந்தனர். திருச்சி உள்பட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட மக்கள் அனைவரும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை நாடி வந்தனர். இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடைத்தரகர்கள் இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது என்று ஒரு காலகட்டம் இருந்தது.

தற்போது மதுரையிலும் ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து பாஸ்போர்ட் பெறலாம்.

ஆனால் தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் பாஸ்போர்ட் சேவையில் இணைய சேவை அறிமுகம் ஆகியவற்றின் காரணமாக தற்போது பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டு விட்டன. பிறந்த குழந்தை முதல் தள்ளாடும் தாத்தா வரை அனைவரும் பாஸ்போர்ட் பெறலாம். நீங்கள் வெளிநாடு செல்கிறீர்களோ இல்லையோ சாதாரணமான ஒரு நேரத்திலேயே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொண்டால் வெளிநாடு செல்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பாஸ்போர்ட் அலுவலகத்தை தேடி முட்டி மோத வேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது முழுக்க ஆன்லைனுக்கு மாறிவிட்டது. மேலும் பாஸ்போர்ட் சேவைகளின் பெரும்பகுதி தனியார் மயமாக்கப்பட்டு விட்டன. இந்தியா முழுவதும் டி. சி. எஸ். எனப்படும் நிறுவனம் 64 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை துவங்கி நடத்தி வருகிறது. திருச்சியில் தில்லை நகர் சாஸ்திரி சாலையில் பாஸ்போர்ட் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பாஸ்போர்ட் சேவா கேந்திரா என பெயர் பி. எஸ். கே. என அழைப்பார்கள். விண்ணப்பதாரர் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பித்திற்கு பதிவு செய்ததும் இந்த அலுவலகத்தில் கொடுக்கப்படும் ஏ. ஆர். என். எனப்படும் அப்பாயிண்ட்மெண்ட் தேதியை குறிப்பிட்ட நேரத்தில் வந்து தேவையான ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு சென்றால் போலீஸ் விசாரணைக்கு பின்னர் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடும்.


பாஸ்போர்ட் தேவைப்படுபவர் முன்பெல்லாம் அவர்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என விதிமுறை இருந்தது. இப்போது புகைப்படம் தேவையில்லை பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே நம்மை புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். விழித்திரை மற்றும் விரல் ரேகை விரல் ரேகைகளையும் பதிவு செய்து கொள்வார்கள். அந்த அளவிற்கு பாஸ்போர்ட் சேவையில் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. விண்ணப்பம் செய்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டை பெற்று விடலாம். இப்போது டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் மூலம் பாஸ்போர்ட்டுக்கு முந்தைய சேவைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பரிசீலனைகளும் முடிந்த பின்னர் பாஸ்போர்ட் புத்தகத்தை பிரிண்ட் செய்து மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கையெழுத்து செய்யும் வேலை மட்டும் தான் மண்டல பாஸ்போர்ட் அலுவலரின் வேலையாக உள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு என்றே முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்தும் சேவை மையங்கள் பி.எஸ்.கே. அலுவலக வளாகத்திலேயே செயல்படுகின்றன. மேலும் பிரவுசிங் சென்டர்களிலும் அதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி விண்ணப்பஙக்ளை பதிவேற்றம் செய்யலாம். போலீஸ் விசாரணை நடைமுறையிலும் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக போலீசார் தங்களது விசாரணை முடிந்த பின்னர் விசாரணை அறிக்கையை ஆன்லைன் மூலமாகவே பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கும் வசதி உள்ளது. இதனால் தேவை இல்லாத வீண் காலதாதம் தவிர்க்கப்பட்டு வருகிறது.

ஆர்டினரி,அபீஸியல், டிப்ளமேட்டிக், ஜம்போ என நான்கு விதமான பாஸ்போர்ட்டுகள் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது.ஆர்டினரி பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், அபீசியல் பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயிர்மட்ட தலைவர்களுக்கும், ஜம்போ பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாட்களில் புதிய பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் .அவசரமாக வெளிநாடு செல்பவர்களுக்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வழிவகை இருக்கிறது. இதற்கு தட்கல் திட்டம் என்று பெயர். இந்த தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும் தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கீழே சொல்லப்பட்ட பட்டியலில் இருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பெற முடியும். அந்த மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பேங்க் பாஸ்புக், எரிவாயு இணைப்பிற்கான ரசீது ,ஓட்டுநர் உரிமம் ,பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் பட்டியலில் இருந்து பாஸ்போர்ட்டுக்காக ஏதேனும் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை 10 வருடங்களுக்கு பயன்படுத்தலாம். மீண்டும் அதற்கான கட்டணத்தைக் கட்டி புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். இப்படி புதுப்பிக்கும் போது 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அந்த பாஸ்போர்ட்டின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டால் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யும்போது பழைய பாஸ்போர்ட் எண் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதனை மறைத்து பாஸ்போர்ட் பெற விரும்பினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க பாஸ்போர்ட் அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Updated On: 22 Sep 2022 3:16 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...