/* */

குஜராத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக இமாலய வெற்றிபெற்றுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்த ஓர் அலசல்

HIGHLIGHTS

குஜராத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்
X

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.

2017ம் ஆண்டு தேர்தலில் 99 இடங்களை வென்றிருந்த பாஜக இந்த தேர்தலில் 57 இடங்களை கூடுதலாக பிடித்து 156 இடங்களில் வென்றுள்ளது.

அதே சமயம் 2017ம் ஆண்டு தேர்தலில் 77 இடங்களை வென்றிருந்த காங்கிரஸ் இந்த முறை 17 இடங்களில் மற்றுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆம் ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றுள்ளது

2017ம் ஆண்டு தேர்தலில் வென்ற இடங்களில் 91 இடங்களை தக்க வைத்த பாஜக 8 தொகுதிகளை இழந்துள்ளது. அவற்றில் 5 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், 3 தொகுதிகளை ஆம் ஆத்மியும் வென்றுள்ளன.

2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 77 இடங்களில் 10 இடங்களை மட்டுமே தக்க வைத்தது. காங்கிரஸ் இழந்த 67 தொகுதிகளில் பாஜக 63 தொகுதிகளை கைப்பற்றியது, ஆம் ஆத்மி 4 இடங்களை பிடித்தது


வாக்கு சதவீதம்:

பாஜக 2017 தேர்தலில் பெற்றதை விட 3% அதிகமாக பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக 52% வாக்குகளை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 2017 தேர்தலில் பெற்றதை விட 14% குறைவாக பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 28% வாக்குகளை பெற்றுள்ளது.

முதல்முறையாக குஜராத்தில் களமிறங்கிய ஆம் ஆத்மி 13% வாக்குகளை பெற்றுள்ளது.

வாக்கு வித்தியாசத்தை பொறுத்தவரை

1 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசம்: பாஜக 9 இடங்களில் வெற்றி

50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம்: பாஜக 49 இடங்கள்

20,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசம்: பாஜக 37, காங்கிரஸ் 15, ஆம் ஆத்மி 4

10,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசம்: பாஜக 15, காங்கிரஸ் 11,

5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசம்: பாஜக 8, காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 2

நகர்புறத்தை பொறுத்தவரை பாஜக 44 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன

புறநகரை பொறுத்தவரை பாஜக 13 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன

கிராமப்புறத்தை பொறுத்தவரை பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ்13 இடங்களிலும் ஆம் ஆத்மி 5 இடங்களிலும் வென்றுள்ளன


பகுதி வாரியாக வெற்றி

மாநிலத்தில் மத்திய பகுதியை பொறுத்தவரை பாஜக 59 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வென்றுள்ளன

மாநிலத்தில் வடக்கு பகுதியை பொறுத்தவரை பாஜக 18 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் ஆம் ஆத்மி 2 இடத்திலும் வென்றுள்ளன

மாநிலத்தில் சௌராஷ்டிரா கட்ச் பகுதியை பொறுத்தவரை பாஜக 46 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் ஆம் ஆத்மி 4 இடத்திலும் வென்றுள்ளன

மாநிலத்தில் தெற்கு பகுதியை பொறுத்தவரை பாஜக 33 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றுள்ளன


இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து வரும் 12-ம் தேதி குஜராத் முதல் - மந்திரியாக பூபேந்திர பட்டேல் மீண்டும் பதவியேற்கிறார். 12-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Updated On: 8 Dec 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?