/* */

அக்டோபர் மாதத்தில் வங்கிகள் 10 நாட்கள் இயங்கும் - 21 நாட்கள் விடுமுறை

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்

HIGHLIGHTS

அக்டோபர் மாதத்தில் வங்கிகள் 10 நாட்கள் இயங்கும் - 21 நாட்கள் விடுமுறை
X

நாடு முழுவதும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு அக்., 9, 23 ஆகிய இரண்டு நாட்களும் முழு விடுமுறை. அக்., 2 சனிக்கிழமையன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை. அக்., 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்களும் ஞாயிற்றுக் கிழமை. இது தவிர அக்., 14, 15ல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை. அக்., 19ல் மிலாடி நபி விடுமுறை. மேற்கண்ட 11 நாட்களும் நாடு முழுவதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை.

மேலும், கூடுதலாக 10 நாட்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்., 1 அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம் ,அக்., 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம், அக்., 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்,அக்., 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா, அக்., 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட். அக்., 16 துர்கா பூஜா சிக்கிம் ,அக்., 18 கதி பிஹு அசாம், அக்., 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம் ,அக்., 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு - காஷ்மீர் ,அக்.,26 அக்செஷன் டே ஜம்மு - காஷ்மீர் ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Updated On: 26 Sep 2021 3:29 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!