மத்திய அரசின் உர நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
HIGHLIGHTS

மத்திய அரசின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய ரசாயனம், உர நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்களவான:
காலியிடம்:
டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 51, எலக்ட்ரிக்கல் 32, இன்ஸ்ட்ரூமென்டேசன் 28 என மொத்தம் 111 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 1.3.2022 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.700. எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 4.4.2022 மாலை 5:00 மணி.
மேலும் முழு விபரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள் .