/* */

'காலம் பொன் போன்றது' : நேரத்தை வீணாக்காதே..! செயலில் இறங்கு..!

self confidence tamil motivational article வாழ்க்கையில் எதை இழந்தாலும் மீட்டு விடலாம். ஆனால் 3 விஷயத்தினை மட்டும் மீட்கவே முடியாது. செலவு செய்த நேரம், போன உயிர், பேசிய சொல் ஆகியவைகளை மீட்கவே முடியாது.... படிங்க..

HIGHLIGHTS

காலம் பொன் போன்றது : நேரத்தை  வீணாக்காதே..! செயலில் இறங்கு..!
X

தன்னம்பிக்கை கட்டுரை. (கோப்பு படம்)

self confident seires...manase....manase...21

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே நேரம் என்பது மிக மிக முக்கியம். நேரத்தைத் திட்டமிடவிட்டால் எந்த ஒரு வேலையும் நடக்காது. அது அது அந்தந்த நேரத்தில் நடப்பதால்தான் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. நேரத்தின் அருமையானது அதனை இழந்தபோதுதான் தெரிய வரும் என்று சொல்வார்கள்.

self confidence tamil motivational article


self confidence tamil motivational article

நம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் திரும்ப பெற்று விடலாம். ஆனால் நீங்கள் இழந்த இந்த கண நிமிஷத்தினை உங்களால் திரும்ப பெற முடியுமா? ஆகையால்தான் பெரியவர்கள் நேரத்தின் அருமையைக் கணக்கிட்டு அது அதற்கு ஒரு கால நிர்ணயத்தினை சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர். அந்தந்த காலத்தில் அதனதனை செய்யாவிட்டால் பின்னர் பெரும் குழப்பம்தான் போங்க...

உலகில் ஒரு சில மனிதர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாது. அவ்வளவு பிசியாக இருப்பார்கள். அதுவே ஒரு சிலருக்கு எப்படி இந்த 24 மணி நேரத்தினை செலவிடுவது என யோசித்துக்கொண்டேயிருப்பார்கள்.இதுபோன்று இருப்பவர்களுக்கு எந்த வேலையும் இருக்காது என்பதே காரணம்.

self confidence tamil motivational article


self confidence tamil motivational article

அதுவும் பள்ளி,கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் நேரத்தினை உரிய முறையில் செலவிடாவிட்டால் தேர்வு நேரத்தில் கடைசிநேரத்தில் உட்கார்ந்து படிக்கும்போது எதை படிப்பது? எதை விடுவது? என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள். ஆனால் இதுபோன்று செய்பவர்களின் மனதில் நிச்சயம் கடந்த காலத்தில் நேரத்தினை வீணடித்தோமே படித்திருக்கலாம் என எண்ணுவீர்கள். ஆனால் போன நேரமும் காலமும் திரும்ப வருமா? ... யோசித்துப்பாருங்கள்...எனவே இருக்கும் நேரத்தினை பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்...தேவையில்லாமல் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடாதீர்கள்... அதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் படிப்பு என்பது அந்த காலத்தில் மட்டுமே படிக்க முடியும்....

self confidence tamil motivational article


self confidence tamil motivational article

நேரவிரயம்

பெரும்பாலான மனிதர்கள் நேரத்தினை தேவையற்ற விஷயங்களுக்காக அதிகம் செலவிட்டு விட்டு பின்னர் பயனுள்ள வேலைகளுக்கு நேரம் இன்றி தவிப்பார்கள். வீடுகளில் கூட முக்கிய வேலைகளைச் செய்யாமல் டிவிமுன் உட்கார்ந்து மணிக்கணக்கில் தேவையில்லாததைப் பார்ப்பார்கள். ஆனால் வேலை என்று வரும்போது அதற்கான நேரம் இருக்காது. ஒரு நாளில் நாம் எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்.. நேரத்தினை உரிய முறையில் செலவிடுபவர்களுக்கே இக்காலத்தில் பிரச்னைகள் வரிசையில் வந்து நிற்கும்போது அதனை உரிய முறையில் செலவிடாதவர்களின் நிலை என்னாகும்? என சற்று யோசித்து பாருங்கள்.. ஆக வாழ்க்கையில் நாம் யாருமே திரும்ப பெற முடியாத நிகழ்வு என்ன தெரியுமா? நேரம் மட்டுமே.. கோடீஸ்வரனாக இருந்தாலும் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத பொருள் நேரம் மட்டுமே...நினைவில் நிலைநிறுத்துங்க.... இனியாவது நேரத்தினை உரிய முறையில் திட்டமிட்டு வேலை செய்யுங்க...

self confidence tamil motivational article


self confidence tamil motivational article

செயலில் கவனம் தேவை

நாம் வாழ்க்கையில் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அந்த வேலையில் நம் முழு மனதையும் செலுத்தி செய்யும்போது எந்த பிரச்னைகளும் எழ வாய்ப்பே இல்லை என அடித்து சொல்லிவிடலாம்.அதுவே அரை மனதோடு அல்லது நினைப்பை வேறுஇடத்தில் வைத்துக்கொண்டு கவனம் பிசகி செய்யக்கூடிய செயல்களில் பல பிரச்னைகளைச்சந்திக்க நேரிடலாம்.

செயல்கள் எனும்போது பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் கற்றலும் ஒரு செயலில்தான் அடங்குகிறது. இன்றைய உலகில் உங்கள் கவனத்தினை திசை திருப்பி பல தொழில்நுட்ப சாதனங்கள் வந்துவிட்டன. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நீங்கள் உங்கள் பாடத்தில் கவனத்தினைச் செலுத்த வேண்டும். தொழில்நுட்ப சாதனங்களான ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளின் மேல் உங்கள் கவனம் இருக்குமானால் நீங்கள் கற்கும் கல்வி சிறக்காது. அதில் உங்கள் நேரத்தினைச் செலவிட்டுவிட்டால் உங்களுக்கு தானாகவே கண்களானது சோர்வடைந்துவிடும்.பிறகு உங்களுடைய பாடத்தினைப் படிக்கும்போது உங்களுக்கு முதற்கட்டமாக துாக்கம்தான் வரும். படிப்பதற்கு ஆர்வம் ஏற்படாது என்பதில் கவனத்தில் கொள்ளுங்கள்.

self confidence tamil motivational article


self confidence tamil motivational article

இழந்த நேரத்தினை எந்த சூழ்நிலையிலும் உங்களால் மீட்கவே முடியாது. அதேபோல் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் , கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவருமே மற்றவர்களைவிட அதிக பொறுப்பு எடுத்து படிக்க வேண்டிய காலகட்டம் இது. அநாவசியமாக பொழுதுபோக்கு சாதனங்களில் உங்கள் கவனம் சென்றால் இழந்த நேரத்தினை மீட்க முடியாது . எனவே உங்கள் பாடத்தில் முழுக்கவனத்தினையும் செலுத்தி பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்யுங்கள்...நிச்சயமாக தொடர் முயற்சி வெற்றியைத்தான் தரும்....

இழந்த நேரத்தினை எந்த சூழ்நிலையிலும் மீட்க முடியாது...

  • இரண்டு சக்திவாய்ந்த போர்வீரர்கள் என்றால் அது பொறுமையும் மற்றும் நேரமும். - லியோ டால்ஸ்டாய்.
  • நேரம் என்பது பணம். - பெஞ்சமின் பிராங்க்ளின்.
  • காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. - நாட்டுப்புற சொலவடை
  • ஒரு நிமிடம் தாமதமாக இருப்பதை விட மூன்று மணிநேரம் சீக்கிரமாக இருப்பது நல்லது. - வில்லியம் ஷேக்ஸ்பியர்.
  • ஒரு மனிதன் செலவழிக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் நேரம். - தியோஃப்ராஸ்டஸ்

(இன்னும் வளரும்)

Updated On: 3 Dec 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?