/* */

ஆசிரியர் அரசு ஊழியர்கள் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட TNTA கோரிக்கை

இரண்டரை லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஊழியர்களின் வயது வரம்பு 58 ஆக குறைப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

HIGHLIGHTS

ஆசிரியர் அரசு ஊழியர்கள் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட TNTA கோரிக்கை
X

ஆசிரியர் அரசு ஊழியர்களின் வயது 58 ஆகக் குறைக்கப்படும் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட TNTA கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டரை லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஊழியர்களின் வயதுவரம்பு 58 ஆக குறைப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் அறிக்கையில்..

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நடவடிக்கை மூலம் சிறப்பான ஆட்சி நடத்திவரும் மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். . மேலும் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்கள் கூட முடியாத நிலையில் நாடு போற்றும் சிறப்பான ஆட்சியினைப் பொறுக்கமுடியாமல் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு வதந்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள்.

தற்போது பத்திரிகை ஊடகம் சமூகவலைத்தளங்களில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வயது 58 ஆகக் குறைக்கப்படும்.அதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று பரப்பி வருகிறார்கள். ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே அரசுத்துறையில் காலியாகவுள்ள 2.50 லட்சம் பணியிடங்கள் நிரப்ப முயற்சிகள் மேற்கொண்டு முதலமைச்சர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

இதனை திசைதிருப்பும் வகையில் 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் 59 வயது முடிந்து 60 வயதினை தொட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்களின் வயது 58 ஆகக் குறைக்கப்படுமென்று சாத்தியமில்லா ஒரு கருத்தினைப் பரப்பப்பட்டுவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஓய்வூதியப்பலன் உறுதிபத்திரமாக வழங்கப்படும் என்றும் வதந்தியைப்பரப்பி வருவதால் திருமணம் ஏற்பாடு செய்தவர்கள் வீட்டுகடன் பெற்றிருப்போர் மத்தியில் பெரும் மனஉளைச்சல் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எப்போதும் அரணாக விளங்கும் திமுக அரசு இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Updated On: 24 July 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்