/* */

ரோஜா குல்கந்து: பெண்களின் கர்ப்பபையை பலப்படுத்த உதவும் அரிய மருந்து

ரோஜா குல்கந்து பெண்களின் கர்ப்பபையை பலப்படுத்த உதவும் அரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ரோஜா குல்கந்து: பெண்களின் கர்ப்பபையை பலப்படுத்த உதவும் அரிய மருந்து
X

ரோஜா குல்கந்து பெண்களின் கர்ப்ப பையை வலுப்படுத்த உதவுகிறது.

இன்றைய விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் மனித இனப்பெருக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பெண்கள் இயற்கையாக கருவுறுதல் நடைபெறுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. இதற்கு முக்கியமான காரணம் இன்றைய இளம் பெண்களுக்கு உள்ள கர்ப்பப்பை பிரச்சனை தான்.

மாறிவரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக பெரும்பாலான பெண் குழந்தைகளின் கர்ப்பப்பை மிகவும் பலம் இழந்ததாக காணப்படுகிறது. இதன் காரணமாக திருமணம் ஆன பின்னர் அவர்களுக்கு தாய்மை அடைவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக திருமணம் முடிந்ததும் பெண்கள் கர்ப்பம் அடையவில்லை என்றால் அவர்கள் குடும்பத்தினர் மட்டும் இன்றி சமூகத்திலும் ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் ஆளாகிறார்கள். இதற்கு தீர்வு காண்பதற்காக குழந்தையின்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கும் பெட்டர்லிட்டி சென்டர் எனப்படும் மகப்பேறு மருத்துவமனைகளை தேடி, நாடி செல்கிறார்கள். இதன் காரணமாக தற்போது குழந்தையின்மை சிகிச்சைக்காக மருத்துவமனைகள் தெருவுக்கு தெரு பெருகி வருகின்றன.

இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் மூல காரணம் அவர்களது கர்ப்பப்பை தான். கர்ப்பப்பை பலமாக இருந்தால் தான் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் விரைவில் தாய்மையும் அடைய முடியும். பெண்கள் தாய்மை அடைவதற்கு கர்ப்பப்பை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இயற்கையாக எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ரோஜா குல்கந்து.


ரோஜா குல்கந்து உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்விக்கும். உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப்புண், குடல் புண், மூலம் போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாகும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் இது உதவுகிறது. ரோஜா குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். வயிற்று உப்புசம், பொருமல் நீங்கும், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அகன்று, சருமப்பொலிவு அதிகரிக்கும்.

இதயம் பலம் தரும். இதன் துவர்ப்பு சுவை ஆண்களுக்கு தாது விருத்தி அளிக்கும். பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவுகிறது. வாய் மற்றும் வியர்வை துர்நாற்றம் நீங்கும். ரோஜா குல்கந்தை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட அனைவரும் தினமும் காலை மற்றும் இரவில் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் ரோஜா குல்கந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ரோஜா குல்கந்தை அப்படியே கொடுக்கலாம். பாலில் கலந்து மில்க் ஷேக் தயாரித்தும் கொடுக்கலாம். ரொட்டி, சப்பாத்தி போன்றவற்றின் மேல் ஜாம் போல தடவியும் கொடுக்கலாம். விருந்து உணவுக்கு பின்னர் வெற்றிலை பீடாவில் குல்கந்து சேர்த்து சாப்பிட்டால் சுவையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.


ரோஜா குல்கந்தை எந்தவித செயற்கை ரசாயனமும் கலக்காமல் வீட்டில் இயற்கையாகவும் சுத்தமாகவும் தயாரிக்க முடியும். நம்முடைய பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் இதை அதிக அளவில் தயாரித்து சந்தைப்படுத்தும் போது லாபகரமான சுயதொழிலாக இது இருக்கும். சிறு முதலீட்டில் எளிதாக தொடங்கலாம். சந்தைப்படுத்தும் முன்பு உணவுப் பொருட்களுக்கான உரிமங்கள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். உங்களுக்கு அருகில் இருக்கும் மளிகை கடைகள், ஆர்கானிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றை அணுகி பாருங்கள். சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்துவது எப்படி என்ற யுத்தியை தெரிந்து கொள்ளுங்கள் முதலில் சிறிய அளவில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து பார்த்தால் சரியான பக்குவத்தை தெரிந்து கொள்ளலாம்.

சரி இனி இயற்கையான முறையில் ரோஜா குல்கந்து தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் ரோஜா இதழ்கள்- 100 கிராம்

பனங்கற்கண்டு 350 கிராம்

தேன் 500 கிராம்

செய்முறை

பன்னீர் ரோஜாவை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தப்படுத்தி வடிதட்டில் வைத்து தண்ணீரை முழுவதுமாக வடிய வைக்க வேண்டும். பிறகு சுத்தமான பருத்தித் துணியில் பன்னீர் ரோஜா இதழ்களை உதிரி உதிரியாக பரப்பி விட வேண்டும். இதனை வீட்டிற்குள் காற்றோட்டமான இடத்தில் மூன்று நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். ரோஜா குல்கந்தை கோடை காலத்தில் தயாரிப்பது நல்லது. பூஞ்சைகள் பாதிப்பு ஏற்பட்டு கெட்டுவிடாமல் இருக்கும்.


பனங்கற்கண்டை பொடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ரோஜா இதழ்களை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைக்க வேண்டும். மிக்ஸியில் அல்லது கல் உரலில் அழைக்கலாம். பின்னர் அந்த விழுதை சுத்தமான உலர்ந்த கண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொள்ள வேண்டும். ரோஜா விழுது மூழ்கும் அளவுக்கு பாட்டிலில் தேன் ஊற்ற வேண்டும் பாட்டிலின் வாய் பகுதியை சுத்தமான பருத்தி துணையால் கட்டி வெயிலில் 10 நாட்கள் வைத்து எடுக்க வேண்டும்.

சுத்தமான கரண்டியால் கலவையை அவ்வப்போது கிளறி வைக்க வேண்டும். பாட்டிலில் தேன் அளவு குறையும்போது மேலும் கொஞ்சம் தேன் ஊற்ற வேண்டும். தேன் பூஞ்சைகள் வராமல் தடுக்கும். 10 நாட்களுக்கு பிறகு ரோஜா குல்கந்தை பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Updated On: 19 April 2023 10:07 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!