/* */

importance of breast feeding for baby தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.... படிச்சு பாருங்க...

importance of breast feeding for baby தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மிக மிக முக்கியமானது. குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கு தாய்ப்பால் புகட்டுவது சிறந்தது. அதன் முக்கியத்துவம் குறித்து பார்ப்போம்.

HIGHLIGHTS

importance of breast feeding for baby  தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு  மிக மிக அவசியம்.... படிச்சு பாருங்க...
X

குழந்தைகளுக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை  தாய்ப்பால் அளிக்கிறது (கோப்பு படம்)

importance of breast feeding for baby


தாய்ப்பாலைப் பெருக்கும் தானிய வகைகள் (கோப்பு படம்)

importance of breast feeding for baby

திருமணமான பெண்கள் அனைவருக்கும் குழந்தை பிறப்பு என்பதுதான் மிகுந்த சந்தோஷத்தினைத் தரும்.அதுவும் முதல் குழந்தை பிறப்பு என்பது குடும்பத்தில் உள்ள அனைவரையும் மகிழ்வடையச் செய்யும் தருணம்.

செல்வத்துள் செல்வம் எது என நம்மிடம் கேட்டால் குழந்தைச் செல்வம் என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகள் உள்ளவீடு எப்போதுமே கலகலப்பாகவே இருக்கும். அந்த மழலை மொழியை நாம் கேட்கும்போது நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் பறந்தோடி விடும்.இன்று எத்தனையோ பேருக்கு பல செல்வங்கள் இருந்தும் குழந்தைச் செல்வம் என்பது இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணமே அவர்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, மாறுபட்ட உணவுப்பழக்க வழக்கம், உள்ளிட்ட பல காரணிகளை நாம் காரணமாக சொல்லலாம். அக்காலத்தில் எல்லாம் கல்யாணம் முடிந்த 10 வது மாதம் என்ன குழந்தை எனக் கேட்பவர்கள்தாம்அதிகம் இருந்தனர்.

importance of breast feeding for baby


importance of breast feeding for baby

ஆனால் இக்காலத்தில் நாகரிக வளர்ச்சியால் இந்த கேள்வியை பலரிடம் கேட்க முடிவதில்லை. அப்படி கேட்டால் தள்ளிப்போட்டதைத்தான் சொல்வர். கடைசியில் அது தள்ளிக்கொண்டே போவதைக் காண முடிகிறது. குழந்தைக்கான கரு உருவாதல் என்பது கடவுளின் அருள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்று இந்த குழந்தைப்பேறுக்காக பல கோயில்களை ஏறி வருகின்றனர். இந்த விஷயங்கள் அனைத்தும் மாற வேண்டும். வாழ்க்கையில் நம்முடன் இருப்பது குழந்தைகள் மட்டுமே.... அவர்கள் வளரும் வரை என்பதை நினைவில் கொள்ளுங்க.....

பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு குழந்தை பெறுவது முதல் சுகம் என்றால் இரண்டாவது சுகம் என்னவென்றால் தாய்ப்பால் கொடுப்பதைத்தான் சொல்லலாம்.

importance of breast feeding for baby


importance of breast feeding for baby

ஆனால் தற்போதுள்ள நாகரிக உலகில் பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதிலும் நாகரிகம் தலைதுாக்க ஆரம்பித்துள்ளதைப் பார்க்கும்போது மனது பதைக்கிறது.உண்மையில் சொல்லப்போனால் அந்த காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிக நாட்கள் கொடுத்ததினால் குழந்தையானது எந்தவித நோய்களுக்கும் ஆட்படாமல் மிக ஆரோக்யமாக வளர்ந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் நிலைமையானது தலைகீழாக மாறிவிட்டதென்று சொல்லமுடியும். காரணம் தற்போதைய சூழ்நிலையில் பெண்களும் அதிக அளவில் வேலை பார்ப்பதால் அவர்களால் தம் குழந்தையின் தேவை களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லலாம்.

வளரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. தாய்ப்பாலானது நோய் எதிர்ப்புசக்தியினை அளிக்ககூடிய கலப்படமில்லாத சத்து மிகுந்த ஆகாரம். அதனைத் தவிர்க்கலாமா? தவிர்க்க கூடாது ஏனெனில் போதிய கால அளவிற்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடிக்காமல் விட்டுவிட்டால் பல பிரச்னைகளும் நோய்களும் அவர்களைத் துரத்துகின்றன.

importance of breast feeding for baby


importance of breast feeding for baby

எனவே குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பெற்று ஆரோக்யமாக வளர ஒரு குழந்தைக்கு தேவையானது தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பிறந்த உடனே சுரக்கும் தாய்ப்பால் சீம்பால் என்று சொல்லப்படும். இதை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுத்தால் ஆகாது என்று சொல்வது தவறு.,சீம்பால் மூலம் தான்குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது. சீம்பாலில் புரதம் மற்றும் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறது. குழந்தையின் ஆரோக்யத்துக்கும் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்தும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன.

குழந்தை பிறந்த முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு அடிக்கடி குழந்தையைப் பால் குடிக்க வைப்பதால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். குழந்தை வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்ப்பாலின் சரியான விகிதத்தில் இடம் பெற்றுள்ளன. குழந்தை உணவான தாய்ப்பால் நோய்க்கிருமிகள் இல்லாதது சுலபமாக கிடைக்க கூடியது .சுத்தமானது. வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்கவல்லது. தாய்ப்பால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, போன்றவை இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால் ஒரு கெடுதலும் வராது. தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், எல்லாவற்றையும் தாய்ப்பால் மூலம் குழந்தை பெறுகிறது.

importance of breast feeding for baby


importance of breast feeding for baby

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளிடையேதான் அன்பு, பாசம், பிணைப்பு, அதிகம் காணப்பபடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.அதிக நாட்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதால் அடுத்த கர்ப்பம் ஏற்படுவதை தள்ளிப்போடவும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளிடையே போதுமான இடைவெளி தரவும் உதவுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் உணர்வையும் கருவுற்ற காலத்திலிருந்தே தாய் தன்னுள்ளே வளர்த்துக்கொள்வது இயல்பு என டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Updated On: 23 April 2023 12:35 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!