/* */

உங்களுக்கு நோயே வரக்கூடாதா? அப்ப...இந்த 6 வழிகளைக் கடைப்பிடியுங்க...

do you live without disease,follow this rules ஆரோக்யமா இருக்கவேண்டும் எனில் நம்மிடையே ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த 6 வழிகளை கடைப்பிடித்தால் உங்க ஆரோக்யம் உங்கள் கையில்தாங்க... படிங்க.... பாலோ பண்ணுங்க...

HIGHLIGHTS

உங்களுக்கு நோயே வரக்கூடாதா?  அப்ப...இந்த 6 வழிகளைக் கடைப்பிடியுங்க...
X

அப்பா...இவ்வளவு தாகமா?  தாகம் தீரும் வரை தண்ணீர் குடிக்கலாமாம்,....(கோப்பு படம்)

do you live without disease,follow this rules

மாறிவரும் பரபரப்பான உலகில் நாம் வாழ்வது என்பதே பெரும் பிரச்னையாக உள்ளது. காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை தொழில்நுட்ப சாதனத்தோடு போராட வேண்டியுள்ளது. அது அலுவலக வேலைக்காகவோ அல்லதுசொந்த உபயோகத்திற்காகவோ எது எப்படி இருந்தாலும் நம்போராட்டங்கள் மட்டும் தினந்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்படி தொடரும்போது அது எந்த பிரச்னைகளும் இல்லாமல் இருந்தால் ஓகேதான்.ஆனால் சர்வர் கோளாறு என்ற போர்வையில் சில முக்கியமான நேரங்களில் அது அடம்பிடிக்கும்போது நம் மனம் உளைச்சலை அடைகிறது. இதுதான் நமக்கு ஆரோக்ய கேட்டிற்கு முதன்மையானதாகவும் ஆகிவிடுகிறது. நம் ஆரோக்யத்தைக் காக்க வேண்டுமெனில் நாம் அனைவருமே இந்த 6 வழிகளை உரிய நேரத்தில் கடைப்பிடித்தால் நிச்சயம் நம் ஆரோக்யத்திற்கு கேடுகள் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை என உறுதியாக சொல்லலாம். அந்த ஆறு படிநிலைகள் என்னென்ன....

*பசி, *தாகம், *உடல் உழைப்பு,*துாக்கம் ,*ஓய்வு , *மன அமைதிஆகியவைகளாகும்.

*பசி

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா? தெரியாதல்லவா? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பிடுகிறீர்கள்?

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப் பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம். பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும்போது பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்? உணவைப் பசித்து, சுவைத்து, சவைத்து கவனித்து இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்யத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

do you live without disease,follow this rules


கப....கப வென்று பசி எடுக்கும் நேரத்தில் சாப்பாட்டிற்காக பசியுடன் காத்திருக்கிறார்...பசித்தவுடன் உண்ணுங்க...அதுதான் நல்லது......(கோப்பு படம்)

do you live without disease,follow this rules

*தாகம்

அனைவருக்கும் பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இது தவறு. ஏசி யில் வேலை பார்க்கும் நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது. மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும். வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் தேவைப்படும். இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது?எனகேட்கிறீர்களா? ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும்இடம், செய்யும் வேலை இதைப்பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.தாகம் எடுக்கும்போது குடியுங்கள். தாகம் தீரும் வரை குடிக்க வேண்டும். மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண்பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்துகுடிக்கலாம்.

do you live without disease,follow this rules


தாகம் எடுத்தால் தாகம் தீரும் வரை தண்ணீரைக் குடிக்கலாமாம்.....தெரியுங்களா?...(கோப்பு படம்)

do you live without disease,follow this rules

*உடல் உழைப்பு

ஒரு வாகனத்தை 3 மாதங்கள் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம். இதற்கு நீங்கள் வாக்கிங், யோகா, ஜிம், இதைச் செய்ய வேண்டிய அவசியம் இ ல்லை. வீட்டு வேலைகளை இயந்திரத்துணையின்றி செய்தாலே போதுமானது. உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்யத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

do you live without disease,follow this rules


உடலை வருத்தி உழைக்கணுமுங்க... அப்பத்தான் நமக்கு செரிமானமாகும்....வீட்டுலேயே சின்ன சின்ன வேலைகளைச் செய்யலாமே... (கோப்பு படம்)

do you live without disease,follow this rules

*துாக்கம்

யாருக்கு துாக்கம் வரும்? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே துாக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவதுக்கு துாக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் துாக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள். எப்படி துாக்கம் வருகிறதென்று? ஒரு மனிதன் உயிர் வாழ உணவு,காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு துாக்கமும் அவசியம். இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்துவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும் கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்கள் ஈடு செய்யவே முடியாது. இரவு துாங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பதாக இருந்தால் மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரியில்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும். நீங்கள் இரவு 9மணிக்கு உறங்கச்சென்றதின்மூலம் ஆரோக்யத்தின் நான்காம் படியில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

do you live without disease,follow this rules


குட்டித் தம்பி எப்படி ஆனந்தமா துாங்கறார் பாருங்க...அதுபோல நாமும் துாங்கினாதான் ஆரோக்யமாம் (கோப்பு படம்)

do you live without disease,follow this rules

*ஓய்வு

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல் உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருந்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம். உடல் கேட்கும்போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்யத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

do you live without disease,follow this rules


வேலை செய்யும்போது இடை இடையே கொஞ்சம் ஓய்வு கொடுங்க.... இது ரிலாக்ஸ் டைமுங்க...(கோப்பு படம்)

do you live without disease,follow this rules

*மன நிம்மதி

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்குசென்று விடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன்வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள். பிடித்த வேலை செய்யுங்கள். மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்தசுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளைக் கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்யத்தினை அடைந்துவிட்டீர்கள். உடலில் ஒரு சதைப்பிண்டம் இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டுவிடும் அதுதாங்க உள்ளம். அதனை ஆரோக்யமாக பார்த்துக்குங்க...

உள்ளம் கெட்டுப்போச்சுன்னா அவ்வளவுதாங்க வாழ்க்கையே போச்சு எனவே எப்போதும் உங்கள் உள்ளத்தினை சந்தோஷமா வைச்சுக்க ட்ரை பண்ணுங்க...ஆரோக்யமே பாதுகாப்பு...உங்கள் ஆரோக்யம் ...உங்கள் கைகளில்தான்... மற்றவர்கள் கைகளில் நிச்சயமாக இல்லை....

do you live without disease,follow this rules


do you live without disease,follow this rules

உங்களுடைய மனம் அமைதி பெற வேண்டும் எனில்..,..நிம்மதியடைய வேண்டுமெனில் எந்த சப்தமும் இல்லாத இடத்தில் அமர்ந்து தியானம் பண்ணுங்க... பாருங்க.... உங்க மனசே லேசாப் போனதா சொல்லும்...அப்புறம் தியானத்திலிருந்து மீண்டு வாங்க.... எப்படிங்க....சொல்றது.... (கோப்பு படம்)

Updated On: 4 Dec 2022 1:10 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்