பழங்களிலுள்ள பவர்புல் சத்துக்கள் நம் உடலுக்கு வலு சேர்க்கும் :தெரியுமா உங்களுக்கு?

நாம் அன்றாடம் சாப்பிடும் பழவகைகளில் உள்ள சத்துக்கள் நம் ஆரோக்யத்தைப் பாதுகாக்கிறது. என்னென்ன பழத்தில் என்ன என்ன சத்துகள் உள்ளன என்பதைப் பற்றிப் பார்ப்போமா? ....படிங்க...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பழங்களிலுள்ள பவர்புல் சத்துக்கள் நம்  உடலுக்கு வலு சேர்க்கும் :தெரியுமா உங்களுக்கு?
X

சத்தான பழங்கள் அனைத்தும்  ஒரே படத்தில்  காட்டப்பட்டுள்ளது. (கோப்பு படம்)


do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

மனிதர்களாக பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்.. ஆமாங்க ... மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஓர் அறிவினை கூடுதலாக நமக்கு இறைவன் வழங்கியுள்ளான். ஆனால் அந்த ஓர் அறிவினால்தான் மனிதன் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறான். உடல் நலத்தினைக் காக்கும் பழ வகைகள் நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம்.ஆனால் என்ன என்ன? பழங்களில் என்ன? என்ன? சத்துகள் உள்ளன என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? ஒரு சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். வாசிப்புத்திறன் உள்ளோருக்கு இது பற்றி ஏதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது பேப்பரிலோ படித்திருப்பார். மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்ப தெரிஞ்சுக்கலாம் வாங்க... படிச்சு பாருங்க....

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

ஆப்பிள்

வெயிலில் அலையும்போது அதிகமாகத் தாகம் எடுத்தால் ஓர் ஆப்பிளை வாங்கிச் சாப்பிடுங்க... தாகம் எடுக்காது.ஆப்பிள் பசியைத்துாண்டும். ரத்தத்தினைச் சுத்திகரிக்கும். வாயில் கோழை வழிதல், பல்லில் காரை படிதல், போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய்களை ஆப்பிளில் உள்ள ஆசிட் அழித்துவிடும்.

புது ஆப்பிள் பழத்துடன் தேனும், ரோஜா இதழ்களும், கலந்து சாப்பிட்டால் ரத்தசோகை, நரம்பு நோய்கள், நீங்குகின்றன. நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழம் குடலுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும். பல்நோய், தோல்நோய்கள், மூத்திரக்கோளாறுகள் நீங்கும்.

ஆரஞ்சு சாத்துக்குடியின் பயன்

*தினமும் துாங்கப்போகும்முன் 100 மில்லி ஆரஞ்சு ஜூஸீடன் அல்லது சாத்துக்குடியில் 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர துாக்கம் நன்றாக வரும்.

*தினமும் ஓர் ஆரஞ்சு சாப்பிடுவதால் பித்தக்கோளாறுகுணமாகும்.

*ஆரஞ்சு ஜூஸ் ரத்தவிருத்திக்கும் அறிவாற்றலைப் பெருக்கவும் உதவுகிறது

do you know the medicinal characters of fruits?do you know the medicinal characters of fruits?

*நெடுந்துாரப் பயணத்துக்குக் கையோடு ஓர் ஆரஞ்சு சாத்துக்குடியை எடுத்துச்சென்றால், வாந்தி,குமட்டலிலிருந்து விடுபடலாம்.

*மங்குஸ்தான் பழத்தால் நாள்பட்ட கழிச்சல், சீதக்கழிச்சல் வெள்ளை ஆகிய நீங்கும். இப்பழத்தை வேகவைத்து பிழிந்து எடுத்த சாற்றை நெருப்பில் வற்ற வைத்து, சர்க்கரை கலந்து பாகு செய்து உட்கொள்ள நாள்பட்ட கழிச்சல் நீங்கும். வெள்ளை நோய் நீங்கும்.

*தர்ப்பூசணிப்பழம் தாகம் தணிக்கிறது. சிறுநீர்த்தொல்லைகளை நீக்கும். குடலுக்கு நல்ல பலனளிக்கும். பசியின்மை, செரியாமை நீங்கும்.

*வேப்பம்பழத்தில் ரசத்தை எடுத்து மணப்பாகு, செய்து உட்கொள்ள தோல் நோய்கள் நீங்கும்.

*மாம்பழத்தால் வரக்கூடிய முழுப்பயனையும் பெற மாம்பழத்தினைச் சாப்பிட்டபின் அதன் கொட்டையை அடுப்பில் போட்டு சுட்டு பருப்பைத்தின்றுவிட வேண்டும்.

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

மாம்பழம்

செரியாமையை மாம்பழம் நீக்கும். ''ஏ'' உயிர்ச்சத்து இருப்பதால் கண்ணொளித் தருகிறது.

மாங்கொட்டையிலுள்ள பருப்பை மிளகு தக்காளிக் கீரைச்சாறுவிட்டு அரைத்து, இலந்தைப்பழ அளவு மாத்திரைகளை உருட்டி நிழலில் காய வைத்து தினமும் 3 வேளையும் தலா ஒரு மாத்திரை மென்று விழுங்கி தண்ணீர் பருகினால் மூலம் நீங்கும்.

மருத்துவ குணங்கள்

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

மாம்பழச்சாறு அருந்துவதால் உடலுக்கு சக்தி ஏற்படுவதுடன் சரும வியாதிகள், முகப்பருக்கள் வராது. மேனியும் பளபளப்பாக இருக்கும்.

மாம்பழச்சாறுடன் பாலும் தேனும் கலந்து சாப்பிட்டால் அது ஒரு சிறந்த டானிக்ஆவதுடன், உடலுக்கு வேண்டிய சக்தியும் நினைவாற்றலும் அதிகரிக்கும்.

புதிய கேரட்டைச் சாறு பிழிந்து மாம்பழ ரசத்துடன் சம அளவு கலந்து ஒரு டம்ளர் வீதம் தொடர்ந்து இரண்டொரு மாதங்கள் சாப்பிட்டால் மூத்திரத் தாரைகளிலும் குடலிலும் உள்ள கல், மண் கரைந்து வெளியேறும்.

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

மாம்பருப்பு

மாம்பருப்பைக் காய வைத்து, வறுத்துப்பொடி செய்து அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து நாள்தோறும் ஒரு தடவை வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் விந்து தானாக கழிதல்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

கிச்சிலிப்பழம்

இதற்கு போஜன கஸ்துாரி என்று பெயர். இது ரத்த சுத்தி நாவுக்கு ருசி தரும். பித்தத்தைக் குறைத்து,உடல் நலம் தரும். நல்ல செரிமான ஆற்றலைக்கொடுக்கும். இருமல், நீரிழிவு, மார்பு நோய் , ஈரல் நோய், ஆகியன நீக்கும். உடலுக்கு வன்மையை உண்டாக்கும்.

பப்பாளி

பப்பாளிப்பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறலாம். பப்பாளிப்பழத்தினைத் தினமும் சாப்பிட்டால் மண்ணீரல்நுரையீரலில் உள் ளகோளாறுகள் நீங்கும்.கண் பார்வை தெளிவடையும். தாதுவிருத்தி, ஆண் தன்மை உண்டாகும். சிறுநீரை அசுத்தங்களுடன் வெளியேற்றும்.

நரம்பு தளர்ச்சிநீங்க

பப்பாளிப்பழத்துடன் வெங்காயச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கி, நினைவாற்றல் பெருகும்.

சிறுநீரக கல் தடுக்க

தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் சிறுநீர் நன்கு இறங்கும். சிறுநீரகக் கல் உருவாகாது.

செரியாமை நீங்க

பப்பாளிப்பழம், சீரகப்பொடி இவற்றுடன் சிறிதளவு எலுமிச்சம்பழ ரசம் கலந்து சாப்பிட செரியாமை நீங்கும்.

பால் நன்றாக சுரக்க

பிரசவமான பெண்கள் பப்பாளிக்காயில் தயாரித்த குழம்பை உணவில் சேர்த்துக்கொண்டால் பால்நன்றாகச்சுரக்கும்.

பயன்கள்

பப்பாளிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி சீரகப்பொடி, எலுமிச்சம்பழ ரசம் கலந்து சாப்பிட்டால்நீண்ட நாள் அஜீரணம், தாய்ப்பால் குறைவு, மலேரியாக் காய்ச்சல் வந்து கல்லீரல் வீங்குதல் ஆகிய நோய்கள் நீங்கும்.

பப்பாளிப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் மூத்திரத் தாரைகளில் கல் உற்பத்தியாகாமல் தடுக்கலாம். பப்பாளிப்பழத்துடன் வெங்காயச்சாறு, தேன் கலந்து சாப்பிடுவதால் நரம்புத்தளர்ச்சி, பலவீனம், நினைவாற்றல்குறைவு, அனைத்தும் மட்டுப்பட்டு உடலுக்கு நல்ல தெம்பும் ஏற்படுகிறது.

பேரீச்சம்பழம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கைத் தணிக்கிறது. பல் , ஈறுகளைப் பயன்படுத்துகிறது. இரும்புச்சத்தை உடலுக்கு அ ளிக்கிறது. கொய்யாப்பழம் மலத்தைக் கழிக்கும்.

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

திராட்சைப்பழம்

ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு, இருதயநோய்கள், மார்பகப்புற்று நோய் அனைத்தையும் திராட்சைப்பழம் போக்கவல்லது.

எலுமிச்சை

உயிர்ச்சத்து ஏ அதிகமாக எலுமிச்சம்பழத்தில் உள்ளது. வயிற்றுக்கடுப்பு, பித்த நோய், காய்ச்சல், தாகம் ஆகியவற்றுக்கு மிக நல்ல பலனை அளிக்கிறது.

மலையேறும்போது போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமப்படுபவர்கள் கையோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் கொண்டு போகலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவாசம் சீராகும்.

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

நாவல்பழம்

நாவல் பழம் ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைப்பதும் நீரிழிவு நோயாளிகளுக்குஇது நல்லது. நாவல் பழச்சாற்றுடன் சிறிதளவு தேனும், நெல்லிக்காய் சாறும் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, அதிக மாதவிடாய், குறைப்பிரசவம், போன்ற குறைகள் நீங்குகின்றன.

நாவல் பழத்தின் விதையை நிழலில் நன்கு காய வைத்து பொடியாக்கி நாள்தோறும் சிறிதளவு தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைத்து நீரிழிவு வியாதியைக் குணப்படுத்துகிறது. இவர்கள் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

வாழைப்பழம்

வாழைப்பழம் செரியாமையை நீக்குகிறது. நன்றாகப் பழுத்த பழத்தைக் குழைத்து மோருடன் சேர்த்துச் சாப்பிட்டால் உள்ளங்கால் , கை, கண் எரிச்சல்கள் நீங்கிவிடும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தைப் பாலில் போட்டு வேக வைத்துக் குழைத்து கலக்கிச் சாப்பிட்டால்்முலவியாதி மூல எரிச்சல் போன்ற நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நன்கு முதிர்ந்த பழுத்தஇனிப்புள்ள பழங்களையே உண்ணவேண்டும்.பொதுவாக எல்லாப் பழங்களும் மலமிளக்கிகளாகும்.

பழங்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய சிறப்பான குணம் யாதெனில் பழமரங்களின் வேர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நீளமானதாகவும் , வலுவுள்ளதாகவும் இருக்கின்றனவோ அந்த அளவுக்கு பூமியின் ஆழத்திலிருந்து தாதுப்பொருட்களைப் பழமரங்கள் கிரகித்துக்கொள்கின்றன.

do you know the medicinal characters of fruits?


do you know the medicinal characters of fruits?

மாதுளம் பழம்

மாதுளம்பழம்,உடலுக்கு குளிர்ச்சி தரும். ரத்த விருத்தி கிடைக்கச் செய்யும். சூலைநோய்களை நீக்கும். வாந்தி மயக்கத்தைப் போக்கும். பேராற்றல் தரும்.குடல் , இருதயம், சிறுநீரகம் ஆகியவை நன்கு இயங்க மாதும்பழரசம் சிறந்தது.

நன்றி :சதானந்தம்.

Updated On: 2 Dec 2022 11:56 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Jamun Fruits நாக்கில் நாட்டியமாடும் சுவை மிகுந்த நாவல் பழம்..!
 2. காஞ்சிபுரம்
  பிளம்பர் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு வி.சி.க.வினர் சாலை மறியல்...
 3. இந்தியா
  2000 Rupees Note News in Tamil - மக்கள் கைகளில் இருந்து மறைந்துவிட்ட 2...
 4. நாமக்கல்
  நாமக்கல் பெரியபட்டியில் எம்.எல்.ஏ. திறந்து வைத்த புதிய சத்துணவு
 5. ஆன்மீகம்
  Palani in Tamil - தென்னிந்தியாவில், ஒரு முக்கிய புனித தலமாக விளங்கும்...
 6. திருவள்ளூர்
  வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
 7. தேனி
  டெல்லியில் அண்ணாமலை..! பா.ஜ.க. மவுனம் கலையுமா ?
 8. தமிழ்நாடு
  Richest district in Tamilnadu தமிழ்நாட்டில் பணக்கார மாட்டம் எது...
 9. ஆன்மீகம்
  Sivan 108 Potri - இறையருளைப் பெற தினமும் 108 சிவன் போற்றி...
 10. தேனி
  உஷார்... செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு