நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் கிராம்பு.. மருத்துவர் கூறுவதை படியுங்கள்…

நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவக் குணம் கிராம் உள்ளது என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் கிராம்பு.. மருத்துவர் கூறுவதை படியுங்கள்…
X

கிராம்பு. (மாதிரி படம்).

கிராம்பு என்றால் என்ன? அதில் நிறைந்துள்ள மருத்துவக் குணங்கள் என்ன? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

கிராம்பு என்பது, Eugenia Caryophyllus (C.Sprengel) Bullock and Harrision என்ற தாவரத்தின் பூக்காத பூ மொட்டுக்களாகும். நூறு கிராம் கிராம்பில் 323 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 20.1 கி, இதில் சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 5.4 கி, மோனோ-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 1.5 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 7.1 கி, மொத்த கார்போஹைட்ரேட் 61.2 கி, அதில், நார்ச்சத்து 34.2 கி, புரதம் 6 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் கிராம்பில் கால்சியம் 646 மிகி (தினசரி தேவையில் 65%), இரும்புச்சத்து 8.7 மிகி (தினசரி தேவையில் 48%), மெக்னீசியம் 264 மிகி (தினசரி தேவையில் 66%), மாங்கனீஸ் 30 மிகி (தினசரி தேவையில் 1502%), பாஸ்பரஸ் 105 மிகி (தினசரி தேவையில் 11%), பொட்டாசியம் 1102 மிகி (தினசரி தேவையில் 31%), ஸிங்க் 1.1 மிகி (தினசரி தேவையில் 7%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் கிராம்பில் வைட்டமின் - ஏ 530 ஐயு (தினசரி தேவையில் 11%), வைட்டமின் - சி 80.8 மிகி (தினசரி தேவையில் 135%), வைட்டமின் - கே 142 மைகி (தினசரி தேவையில் 177%), வைட்டமின்-இ 8.5 மிகி (தினசரி தேவையில் 43%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 93 மைகி (தினசரி தேவையில் 23%) என்றளவில் உள்ளது.

பாதுகாப்பது எப்படி:

கிராம்பினை உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது கண்ணாடி கொள்கலனில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, ஈரப்பதமற்ற, உலர்ந்த மற்றும் வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தால், தாராளமாக 3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைத்தால், கிராம்பு மூன்று மாதங்களிலேயே நிறம் குறைய ஆரம்பிக்கும். ஒருவேளை, உரிய சூழ்நிலையில் இருப்பு வைத்தும், கிராம்பின் வாசனை குறைந்து போய்விட்டால், இளஞ்சூட்டில் இரண்டு நிமிடங்கள் வறுத்தால், அதன் வாசனை மீண்டுவிடும்

மருத்துவக் குணங்கள்:

கிராம்பு ஒரு சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி ஆகும். பல பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடும் திறன் பெற்றது இந்தக் கிராம்பு. எனவேதான், பல பற்பசைகள், மவுத் வாஷ் உள்ளிட்டவை கிராம்பை உள்ளீட்டுப் பொருளாகக் கொண்டுள்ளன. கிராம்பு பல் மருத்துவத்தில் வலியை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு எண்ணெயில் உள்ள யுஜினால், ஸிங்க் ஆக்ஸைடு உடன் இணைத்து, பற்சொத்தைகளை அடைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. கிராம்பு பாலுணர்வைத் தூண்டும் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கிராம்பு ஒரு சிறந்த ஆண்ட்டி-இன்ஃப்ளமெட்டேரி ஏஜென்ட் ஆகும்.

கிராம்பில் ஃப்ளாவினாய்ட்ஸ் அதிகமாக உள்ளது தான் இதற்கு காரணம். இந்தக் குணமே,கிராம்பு எண்ணெய் வாத நோயை குணப்படுத்தவும் காரணம். கிராம்பு ஹைட்ரோ குளோரிக் அமிலச் சுரப்பினை அதிகப்படுத்தி, செரிமான மண்டலத்தின் அசைவுகளை (Peristalsis) அதிகரிக்கிறது.

நுரையீரல் புற்று நோய்:

கிராம்புப் பொடியை, தேனுடன் கலந்து, பருவில் தடவி வந்தால் முகப்பரு சரியாகும். கிராம்புப் பொடியை தண்ணீரில் கலந்து, காயங்களில் வைத்தால், காயம் சீக்கிரம் சரியாகும். பசியின்மை, வாந்தி வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை போன்ற பல வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாக கிராம்பு பயன்படுகிறது.

கிராம்பு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கிராம்பு நகத்தில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றுவதற்கும் கிராம்பு உதவுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) மற்றும் சைனுஸைட்டிஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாக கிராம்பு பயன்படுகின்றது.

மேலும், நாசி பாதையை சுத்தப்படுத்தவும் கிராம்பு எண்ணெய் பயன்படுகின்றது. கிராம்பு நுரையீரல் புற்று நோய் மற்றும் தோல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 April 2023 4:34 AM GMT

Related News

Latest News

 1. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 2. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 3. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 4. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 5. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
 6. சினிமா
  Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
 7. தூத்துக்குடி
  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
 8. லைஃப்ஸ்டைல்
  egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...
 9. சினிமா
  விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
 10. நாமக்கல்
  சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில்...