/* */

Apricot in tamil-பெண்களுக்கு உகந்த பழம், பாதாமி..! எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!

பாதாமி பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. அளவோடு சாப்பிடுவதன் மூலமாக பல நன்மைகளை பெற முடியும்.

HIGHLIGHTS

Apricot in tamil-பெண்களுக்கு உகந்த பழம், பாதாமி..! எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!
X

apricot in tamil-பாதாமி பழம் (கோப்பு படம்)

Apricot in tamil

நமது பூமியில் உள்ள பல பழவகைகளில் ஆரோக்யமான பழங்களில் ஒன்றாக இருப்பது பாதாமி பழம் ஆகும். இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு–காஷ்மீரில் பரவலாக பயிரிடப்படும் பாதாமி பழம் உடல் ஆரோக்யத்திற்கு அற்புதமான பல நன்மைகளைத் தருகிறது.

பாதாமி பழம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் விளைகிறது. மென்மையான தோல் கொண்ட பாதாமி பழத்தின் மரம் 7 முதல் 10 மீட்டர் உயரம் கொண்டதாக வளரக்கூடியது. பாதாமி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

Apricot in tamil


இதை பிற பழங்களை உட்கொள்வது போல பச்சையாக சாப்பிடலாம். மேலும் இதில் இருந்து ஜாம் மற்றும் ஜெல்லி தயார் செய்யலாம். இந்த கட்டுரையில் பாதாமி பழத்தின் ஆரோக்ய நன்மைகளைக் காண்போம் வாங்க.

பாதாமி பழத்தின் ஊட்டச்சத்துகள்

பாதாமியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் நியாசின் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில், அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன. பாதாமி பழம் உடலை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாமி பழத்தின் நன்மைகள்

Apricot in tamil

சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

பாதாமி எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் தோல் தொடர்பான நோய்களைத் தடுக்க முடியும். பாதாமி பழத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களே இதற்கு முக்கிய காரணமாகும்.


கண்களுக்கு நன்மை பயக்கும் :

பாதாமி பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண்களை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கண் நோய்களைத் தடுக்கிறது.

இரத்த சோகை குணமாக :

பாதாமி பழத்தில் இரும்பு மற்றும் தாமிரம் ஆகிய சத்துகள் உள்ளன. இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், இரத்தத்தில் அதிக சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் சோர்வு, பலவீனத்தை குறைக்கிறது.

Apricot in tamil

காய்ச்சலைக் குணமாகும் :

பாதாமி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

புற்றுநோயைத் தடுக்கிறது :

பாதாமி பழத்தில் கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.


ஆஸ்துமாவுக்கு நன்மை அளிக்கிறது :

பாதாமி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது ஆஸ்துமாவுக்கு நன்மை பயக்கிறது. மேலும் நிவாரணம் தரவும் செய்கிறது.

Apricot in tamil

செவிக்கு நன்மை பயக்கிறது :

காது வலியை குணப்படுத்த இரண்டு சொட்டு பாதாமி எண்ணெய் போதுமானதாகும். பாதாமி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களே இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இதயத்தை பராமரிக்கிறது :

பாதாமி பழத்தில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை, இதய நோய் பாதிப்புகளை தடுப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது :

பாதாமி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது :

பாதாமி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை அகற்ற உதவுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கிறது.


கர்ப்ப காலத்து பயன் :

கருவுறாமை, இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பாதாமி பழம் துணை புரிகின்றது. பாதாமி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, சிலிக்கான், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த அப்ரிகாட் இரத்த சோகையைத் தடுக்கிறது மற்றும் இதிலுள்ள பொட்டாசியம் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது.

Apricot in tamil

மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது :

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதாமி பழம் பயனுள்ளதாக அமைகிறது. தினசரி ஒரு பாதாமி பழத்தை உட்கொள்வதன் மூலம், மலச் சிக்கலை தீர்க்கமுடியும்.

பாதாமி பழத்தின் பக்க விளைவுகள் :

பாதாமி பழங்களை அதிகமாக உட்கொள்ளும் போது, இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறன.

அவையாவன :

ஒவ்வாமை:

பாதாமி பழத்தை உட்கொள்வதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால், அதை நிறுத்தவேண்டும். ஏனெனில், இது தோல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பாதாமி பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், பாதாமி பழம் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்யம் குறைகிறது.

Apricot in tamil


குறைந்த இரத்த அழுத்தம் :

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாமி பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கிறது.

பாதாமி விதைகளில் சிறிதளவு சயனைடு இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால்,பாதாமி பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாள் ஒன்றுக்கு 30 பாதாமி விதைகளுக்கு மேல் உட்கொள்ளக் கூடாது.

Updated On: 23 Aug 2023 12:19 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...