சாண்டா இஸ் பேக்: சந்தானத்தின் கிக் பட டிரெய்லர் வெளியானது

பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானத்தின் ’கிக்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாண்டா இஸ் பேக்: சந்தானத்தின் கிக் பட டிரெய்லர் வெளியானது
X

கிக் பட போஸ்டர்.

பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் 'கிக்' என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார். மேலும் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா என்பவர் இசையமைத்துள்ளார். 'கிக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான, நடிகர் சந்தானம் பாடிய 'சாட்டர்டே இஸ் கம்மிங்' என்ற பாடலும், ரசிகர்களின் வரவேற்பை சம்பாதித்தது.

நடிகர் சந்தானம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது 'கிக்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் முறையாக நடிகர் சந்தானத்துடன் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், 'கிக்' திரைப்படத்தில் இணைந்துள்ளார். பல்வேறு நகைச்சுவை திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால், இது வெற்றிப் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 24 Jan 2023 10:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...