/* */

ரூ.7.5 லட்சத்தில் துணிவு பட கட் அவுட்: வைக்கப்பட்டது எங்கே தெரியுமா?

ரூ.7.5 லட்சத்தில் துணிவு பட கட் அவுட் வைக்கப்பட்டது எங்கே தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

ரூ.7.5 லட்சத்தில் துணிவு பட கட் அவுட்:  வைக்கப்பட்டது எங்கே தெரியுமா?
X

துணிவு படத்திற்காக வைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட்.

spend huge money for thunivu movie banner6 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவந்து தியேட்டர்களை கலக்கி கொண்டிருக்கின்றன. ஆர்வ மிகுதி காரணமாக தளபதி மற்றும் தல ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அபிமான நடிகர்களை கொண்டாடி வருகிறார்கள்.

spend huge money for thunivu movie bannerஅஜித் நடித்து வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் ஆரம்பத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதை அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் எச். வினோத் ஏற்கனவே இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான திரைப்படம் என்று அறிவித்து இருந்தார்.

spend huge money for thunivu movie bannerஇதன் அடிப்படையில் ரசிகர்கள் துணிவு படத்தை திரையில் பார்ப்பதற்கு ஆவலுடன் இருந்தனர். ரசிகர்கள் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் பேனர் மற்றும் கட் அவுட் வைத்து வந்தனர். மேலும் விஜய் ரசிகர்கள் இந்த கட் அவுட்டை பார்த்து வாயை பிளந்து வருகின்றனர், அந்த அளவிற்கு பிரமாண்டமாக துணிவு படத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை விட ஒரு படி மேலாக பெங்களூருவில் உள்ள தமிழ் ரசிகர்கள் அதிக செலவில் கட் அவுட் வைத்துள்ளனர்.

spend huge money for thunivu movie bannerபெங்களூருவில் வாழும் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமான கட் அவுட் வைத்து அதற்கு சுமார் ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள மாலையை அணிவித்து உள்ளனர். இந்த கட் அவுட் ரெடி பண்ணுவதற்கு ரசிகர்கள் நான்கு மாதமாக நேரத்தை செலவழித்து இருக்கிறார்கள். மேலும் இந்த கட் அவுட்டில் மாலை கூட கிரேன் உதவியோடு தான் போடப்பட்டதாம்.

spend huge money for thunivu movie bannerஆனால் இந்த மாதிரியான பிரம்மாண்டமான மாலை போடக்கூடாது என சொல்லிய நிலையில் தற்போது இதை கழட்டும் படியாக ரசிகர்களிடம் உத்தரவு போட்டு உள்ளார், தல. இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திலும், கோபத்திலும் இருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் கட்ட அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து வருகின்றனர்.

spend huge money for thunivu movie bannerஇந்த மாதிரியான செயல்கள் வேண்டாம் என்று தான் அஜித் அவர்கள் வீண் செலவுகளையும் இதற்கான நேரத்தையும் வீணாக்க கூடாது என்று முன்னதாகவே அவர்களின் ரசிகர்களுக்கு வலியுறுத்தி இருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் அஜித் மேல் இருக்கும் அசைக்க முடியாத அன்பை வெளிக்காட்டும் விதமாக இந்த மாதிரியான செயல்களை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

spend huge money for thunivu movie bannerஇப்பொழுது துணிவு திரைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித்திற்கு துணிவு திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 12 Jan 2023 8:09 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...