'இரவின் நிழல்' இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியீடு..!

இயக்குநர் ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இரவின் நிழல் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியீடு..!
X

திரைப்பட இயக்குநர் ஆர்.பார்த்திபனை புதுமைகளின் புதையல் என்று சொல்லத் தயங்கவேண்டியதேயில்லை. அந்தளவுக்கு அவர், கடந்த காலங்களில் பல புதுப்புது சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து அவற்றை ரசிகர்கள்… முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் நடுவிலும் வெளிப்படுத்தி தனது தனித்த அடையாளத்தை பளிச்சென அறியவைத்தவர்.

அவ்வகையில், இன்று(16/06/2022) மாலை 6:00 மணிக்கு 'இரவின் நிழல்'படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை நடிகரும், சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இதற்கான அறிவிப்பை, ஆர்.பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் கீழ் பகுதியில், இப்படிக்கு திரைப்பட முன்னேற்றக் கழகத் தொண்டர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் என்ன புதுமை என்றால்,

திரைப்பட முன்னேற்றக் கழக என்ற வார்த்தைகளின் முதல் எழுத்தை ஹைலைட்டாக்கி தி.மு.க. தொண்டர் என குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளதுதான். இயக்குநர் ஆர்.பார்த்திபனின் இந்தப் புதுமையை சுமந்த பதிவு சமூகவலைத்தளங்களில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது.

Updated On: 16 Jun 2022 6:29 AM GMT

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர்...
 2. குமாரபாளையம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா
 3. கடையநல்லூர்
  சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
 4. இந்தியா
  சுதந்திர தினம் 2022 இந்தியா புதிய திசையில் செல்லும் வரலாற்று நாள்:...
 5. இந்தியா
  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்
 6. காஞ்சிபுரம்
  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விரைவில் அரிசி அரவை ஆலைகள்: அமைச்சர்...
 7. நாமக்கல்
  ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ. 2.46 லட்சம் மோசடி
 8. ஈரோடு
  ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 2 பேர் கைது
 9. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 10. காஞ்சிபுரம்
  75 வந்து சுதந்திர தினம் : தூய கைத்தறி பட்டு மூலம் நெசவு செய்யப்பட்ட...