/* */

சின்னக்குயில் சித்ராவுக்கு, பழசி ராஜா விருது

கேரளாவில், வரும் 16 ம் தேதி, பாடகி சித்ராவுக்கு, பழசி ராஜா விருது வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

சின்னக்குயில் சித்ராவுக்கு, பழசி ராஜா விருது
X

பின்னணி பாடகி சித்ரா.

பிரபல சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 'சின்னக்குயில்' என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் பாடகி சித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் அதிக பாடல்கள் பாடி உள்ளார்.

இதுவரை ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும், மத்திய அரசின் பத்ம விபூஷண் விருதையும் பெற்றவர்.

தற்போது, பாடகி சித்ராவுக்கு கேரளாவில் இந்த ஆண்டுக்கான பழசி ராஜா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி கோழிக்கோடு தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் விழாவில், பிரபல மலையாள டைரக்டர் எம்.டி.வாசுதேவன் நாயர் இந்த விருதை வழங்குகிறார். பாடகி சித்ரா தலைமுறைகள் கடந்தும் இனிமையான பாடல்களை பாடியதற்காக, பழசி ராஜா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, விருது கமிட்டி தெரிவித்துள்ளது.

Updated On: 9 Aug 2022 6:27 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...