/* */

நாகசைதன்யா வதந்திகளுக்கு நான் காரணமல்ல… நடிகை சமந்தா பதில்..!

Samantha News Today - நடிகர் நாகசைதன்யா குறித்த வதந்திகளுக்கு தான் காரணமல்ல என்று நடிகை சமந்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாகசைதன்யா வதந்திகளுக்கு நான் காரணமல்ல… நடிகை சமந்தா பதில்..!
X

நடிகை சமந்தா.

Samantha News Today - நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்குப் படவுலகின் இளம் நாயகர்களில் ஒருவருமான நடிகர் நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலர்களாக வலம் வந்தனர். இந்நிலையில், இருவரும் இருவீட்டாரின் சம்மதத்தோடு, திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் இணைந்தனர்.

இந்நிலையில், இருவருக்குள்ளும் உண்டான முரண்பாட்டால், தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தனர். இவர்களது பிரிவிற்கு காரணம் சமந்தாதான் என பல வதந்திகள் கிளம்பியன. சமந்தாவின் பெயரைக் கெடுக்கும்படியான அந்த வதந்திகளுக்கு நாக சைதன்யாதான் காரணமென சமந்தா தர்ப்பில் தகவல் வெளியானது.

இவை நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில், தற்போது நாக சைதன்யா நடிகை ஷோபிதாவுடன் பழகுவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதாகவும் செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டு சமந்தா தரப்பு கூறியதைப்போலவே, தற்போது, நாகசைதன்யா புகழைக் கெடுப்பதற்காக சமந்தா தரப்பு திட்டமிட்டு இப்படி வதந்திகளைக் கிளப்புவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்கள் பற்றிய வதந்திகள் என்றால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும். அதுவே ஆண்கள் மீதான வதந்தி என்றால் அது நிச்சயம் பெண்ணால் பரப்பப்பட்டிருக்கும் என்ற பொய்தான் காலகாலமாக இங்கு இருந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட நாங்கள் இருவருமே தெளிவாகப் பிரிந்து, எங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நீங்களும் இதை விட்டு விடுங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலை மற்றும் குடும்பத்தைப் பாருங்கள்' என சமந்தா வதந்தி செய்திகளுக்கு பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி இட்டுள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Jun 2022 10:07 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை