/* */

'பத்து தல' படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட நடிகர் சிம்பு

'பத்து தல' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

பத்து தல படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட நடிகர் சிம்பு
X

பத்து தல பட போஸ்டர் (பைல் படம்)

மாநாடு படத்தைத் தொடர்ந்து கௌதம்மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்தில் நடிப்பது குறித்தா புதிய அப்டேட்டாய் சிம்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம்மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகி வந்த நிலையில் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறோம் எனச் சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது 'பத்து தல' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதனைச் சிம்பு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்