Five years of GST: நாம் என்ன சாதித்தோம்? நாம் எங்கு செல்கிறோம்?

இந்தியாவில் நாடு முழுவதும் 2017 ஜூலை 1ஆம் தேதி முதல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Five years of GST: நாம் என்ன சாதித்தோம்? நாம் எங்கு செல்கிறோம்?
X

Five years of GST 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டபோது, ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும்போது வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Five years of GST ஜிஎஸ்டியில் உள்ள முக்கிய பிரச்சினை வெவ்வேறு வரி விகிதாச்சாரங்கள்தான். உதாரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த பொருளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டிருக்கும். மூலப்பொருட்களின் விலையுடன் உற்பத்திச் செலவை சேர்த்துதான் கணிசமான லாபத்தொகை சேர்க்கப்பட்டு விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது. மூலப்பொருட்களுக்கான அதிக வரிவிதிப்பால் உற்பத்தியாளர்கள் உற்பத்திப்பொருட்களின் விலையை உயர்த்தவேண்டிய நிலை ஏற்படும்.

வணிக நடவடிக்கைகளில் இணக்கமான சூழல் நிலவாமல் சுமை அதிகரிக்கிறது. இதனால் விற்பனையில் மாற்றம், நல்லிணக்கம் மற்றும் கடன் பெறுதல் போன்றவைகளில் உற்பத்தியாளர்களுக்கு தொய்வு ஏற்படுகிறது. கூடவே இ-இன்வாய்ஸ்கள் மற்றும் இ-வே பில்கள் போன்றவையும் புதிய காரணங்களாக அமைந்தன. வரி விகித வகைப்பாடு மற்றும் கட்டமைப்பில் ஒரு பின்னடைவை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளில் பெரும்பாலானவைகள் வணிகர்களுக்கு எதிரானவைகளாக உள்ளதால் அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

ஒரு பகுதியில் கடன் குவிகிறது. மற்றொரு பகுதியில் அவர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளதால், உற்பத்திச் செயல்பாட்டு மூலதனத்தைத் தடுக்கிறது. தொழில்துறைக்கு உள்ளீட்டு வரிக் கடன் நடவடிக்கைகளில் சிறிது நிவாரணம் வழங்கும் CGSTயின் போது வரவுகளை சரிசெய்வதற்கான சில ஏற்பாடுகள் அவசியம்.

இந்த ஐந்தாண்டு மைல்கல்லில் அனைத்து பெரிய, சிறிய வணிகங்களையும் பாதித்துள்ள சட்டத்தை இடைநிறுத்தி, அதனை சரியாக செயல்படுத்துவதற்குரிய வகையில் புதிய சீர்திருத்தங்களை செய்வதற்கு இது சரியான சமயம்.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஜிஎஸ்டி என்ன சாதித்தது? மேலும் நாம் எதை நோக்கி செல்கிறோம்?

2017க்கு முன்பு, கிடங்குகளை எங்கு அமைப்பது தொடங்கி உற்பத்தி வரை பார்த்தால், சம்பந்தப்பட்ட வரிகளின் அடிப்படையில்தான் வணிக நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டது. 2017க்கு முன்பு இருந்த வரிகளின் வீழ்ச்சி காரணமாக வணிகர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்தது. ஒரு பெரிய உருமாற்ற மறைமுக வரி சீர்திருத்தம் மூலம் வரி அடிப்படையை அதிகரிப்பதில் வெற்றி பெற்றது. மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டதால், வணிகங்களும், நம் நாடும் பலனடைந்துள்ளன.

1950ம் ஆண்டிலிருந்து நமது அரசியலமைப்பு, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களை பிரித்துள்ளது. ஜிஎஸ்டிக்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்பட்டது என்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏனென்றால் இப்போது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் சமமான உரிமைகள் கிடைக்கிறது. அல்லது இரண்டிற்கும் இரட்டை உரிமைகளை வழங்கப்படுகிறது. மிகச்சில நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு உள்ளது.

Five years of GST அரசு கவனம் செலுத்த வேண்டிய ஐந்து பகுதி:

இடைக்கால விதிகள், இன்றும் கூட, முந்தைய கால வரிகளுக்கான கிரெடிட்டைக் கோருவதில் நிறைய சர்ச்சைகள் உள்ளன.

சப்ளையர் தனது வருமானத்தை சரியாக தாக்கல் செய்து வரி செலுத்தியிருந்தாலும், உள்ளீட்டு வரி செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பை வாங்குபவரின் மீது சுமத்துகிறது. எனவே, இதுபோன்ற பொறுப்பு ஒரு பெரிய நிறுவனத்திற்கு கூட ஒரு பெரிய தலைவலி. உள்ளீட்டு வரி வரவின் தடையற்ற ஓட்டத்தை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இல்லையெனில், இந்த வரிவிதிப்பின் நோக்கம் அடையவேண்டிய இலக்கை அடையாது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இது தனித்தனியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நிறுவனங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு பிராந்தியத்தில் இருந்து மற்றொரு பிராந்தியத்திற்கு கடன் பெறுவதில் எந்தவிதமான செயலிழப்பும் இல்லை.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, வணிகம் தொடர்பான அல்லது வணிகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு பொருளுக்கும், வரிக் கடன் அனுமதிக்கப்பட்டது. இப்போது, விதிவிலக்கு பட்டியல் அதிகரித்து வருகிறது.

உற்பத்தித் தொழிலுக்கு எரிசக்தி ஆற்றல் மிக முக்கியமான அங்கமாகும். செயல்படும் தொழிலைப் பொறுத்து, 30 முதல் 50%, நாம் எரிசக்தி ஆற்றல் செலவு செய்கிறோம். ஆனால், எரிசக்தி செலவு ஜிஎஸ்டியின் ஒரு பகுதியாக இல்லை.

எனவே, வரிகளின் அடுக்கு தாக்கம் இன்னும் தொழில்துறையில் உள்ளது. அதை கூடிய விரைவில் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது.

Five years of GST பெரிய தவறுகள்:

தாக்கல் தேவைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக சேவைத் துறைக்கு. பல மாநில செயல்பாடுகளைக் கொண்ட ஒரு வங்கியை அனைத்து மாநிலங்களிலும் ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி தீர்ப்பாயம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், உறுப்பினர்களுக்கான தகுதி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் காரணமாக அரசாங்கம் உதவியற்றதாகத் தோன்றுகிறது. இது அனைத்து வகையான தீர்ப்பாயங்களுக்கும் தொடர்ந்து இருக்கும் பிரச்சினை.

இறுதியாக, GSTN அமைப்புகளின் பயன்பாட்டைப் பொறுத்த வரையில் GST அதிகாரிகள் கொண்டிருக்கும் நிலை மற்றும் புரிதல் முக்கியமானது. நீங்கள் பொதுவான எந்த வகை வருவாய் அதிகாரிகளை கையாளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வருவாய் அதிகாரிகளிடைய சரியான புரிதல் உள்ளது.

உச்சகட்டமாக மாநிலத்திற்கும், மத்தியிற்கும் இடையே தொடர்ந்து நடக்கும் அரசியல் மந்தநிலை, இதன் விளைவாக அரசு ஊழியர்களும் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படுகின்றனர். எனவே, செயல்படுத்துவதில் உள்ள நமது சவால்களுக்கு அடிப்படைக் காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பு மற்றும் இரண்டாவது அதிகாரிகளின் பயிற்சி மற்றும் நோக்குநிலை. ஏனென்றால், தகவல் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பு திறமையாக செயல்பட்டாலும், உங்கள் அதிகாரிகள் அதற்கு நேர்மாறான பார்வையை எடுத்துக் கொண்டால், உதாரணமாக, இடைக்கால வரவுகளைச் சொல்லலாம், பின்னர் வரி செலுத்துவோர் பாடு திண்டாட்டம் தான்.

Updated On: 2022-07-03T20:03:53+05:30

Related News

Latest News

 1. சினிமா
  'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே...
 2. திருவொற்றியூர்
  சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு...
 3. திருவொற்றியூர்
  அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
 4. ஜெயங்கொண்டம்
  வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
 5. திருவொற்றியூர்
  பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ்...
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று
 7. இந்தியா
  போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
 9. செஞ்சி
  செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை