/* */

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்க உதவும் கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
X

அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன்.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2023ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்ஏ (mRNA) தடுப்பூசிகளை உருவாக்கியதற்காக’ இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Oct 2023 4:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  2. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  3. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  5. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  6. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  7. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  8. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...