/* */

பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே பப்புவா நியூ கினியா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்

HIGHLIGHTS

பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்
X

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர்.

சமீபகாலமாக உலக நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தைவான் நாடு வெகுவாக பாதிக்கப்பட்டது. அங்கிருக்கும் கட்டடங்கள் சீட்டுக்கட்டுப் போல சரிந்த வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படியான நிலையில் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே பப்புவா நியூ கினியா என்ற தீவு உள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் தான். அதனால் எந்த நேரத்திலும் மக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான எச்சரிக்கையுடன் வாழுவர்.

இங்கு கடந்த 2018ல் ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 125 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து எப்போது நிலநடுக்கம் ஏற்பட்டாலும் மக்கள் தங்கள் உயிரை தற்காத்து கொள்வதில் கவனமுடன் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6.56 மணியளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான நிலையில், நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த விவரம் எதுவும் வெளிவரவில்லை. அங்கு கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 15 April 2024 4:16 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  2. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  3. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  4. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  5. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  6. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  7. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...