/* */

எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தலாம்!: மார்க் ஜுக்கர்பெர்க்

எண்ணங்கள் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய கருவியை உருவாக்கிவருவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தலாம்!: மார்க் ஜுக்கர்பெர்க்
X

எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான நியூராலிங்க் தனது முதல் மனித சோதனைகளை சமீபத்தில் தொடங்கியது. கேஜெட்களை நேரடியாக மூளை மூலம் கட்டுப்படுத்த மனிதர்களுக்கு 'வல்லரசுகளை' வழங்கும் சிப்களை நிறுவனம் உருவாக்கி வருகிறது. நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்ட முதல் நோயாளி குணமடைந்து வருவதாகவும், அவரது மூளையால் கணினி மவுஸைக் கட்டுப்படுத்த முடிந்ததாகவும் நிறுவனத்தின் இணை நிறுவனர் சமீபத்தில் அறிவித்தார்.

இருப்பினும், பில்லியனரின் தொடக்கமானது நரம்பியல் தொழில்நுட்ப பந்தயத்தில் மட்டும் இல்லை என்பது போல் தெரிகிறது. மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது சொந்த நரம்பியல் திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். நரம்பியல் சமிக்ஞைகளைப் படிக்கக்கூடிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்குவதில் நிறுவனம் தற்போது கவனம் செலுத்துகிறது.

மனிதனின் மூளையில் ஏற்படும் மிக நுண்ணிய மின் சமிக்ஞைகள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கிவருவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஒரு சிறிய கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது என்றே நமக்குத் தெளிவாய் தெரியாது. அப்படி இருக்கையில் காற்றில் எப்படி கற்றைகள் கலந்தது? செய்யறிவுகள் எப்படி இயங்குகின்றன? போன்ற கேள்விகள் முன்னால் நாம் நெருப்பைப் பார்த்து மிரண்ட ஆதிமனிதனாக நிற்கும் நிலையில், தினமொரு அறிவியல் அதிசயம் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

அந்த வரிசையில் நம் முன்னால் மேலுமொரு நெருப்பை மெட்டா நிறுவனர் கொடுத்துள்ளார். மனிதனின் மூளையில் ஏற்படும் மிக நுண்ணிய மின் சமிக்ஜைகள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கிவருவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தனது புதிய கருவியைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துள்ள அவர், இந்த கருவி மனிதனின் கை அசைவுகள் மற்றும் மூளை சமிக்ஜைகளை இணைத்து அதன் மூலம் கணினி சாதனங்களைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்.

இந்த நரம்பியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆர்வம் புதிதல்ல. ஏற்கனவே எலான் மஸ்க்கின் நியூரோ லிங்க் எனும் நிறுவனம் இந்த வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை மனித மூளையில் பொறுத்தி அதன் மூலம் கணினிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறது.

அதுமட்டுமின்றி சிறிய கணினி சிப்பை, மனிதர் ஒருவரின் மூளையில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, சோதனைகளில் வெற்றி கண்டுவருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மார்க், அறுவை சிகிச்சை ஏதுமின்றி அணிந்துகொள்ளும் கருவியாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகவும், இன்னும் 3 வருடங்களுக்குள் தனது புதிய கருவியை விற்பனைக்கு தயார் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் சைகைகள் நிச்சயமற்றவை மற்றும் கேமரா அடிப்படையிலான கண்காணிப்புக்கான பிழைகளுக்கு ஆளாகின்றன என்று ஜுக்கர்பெர்க் விளக்கினார். இருப்பினும், மூளை சமிக்ஞைகள் சீரானவை மற்றும் "ஒவ்வொரு நபருக்கும் காலப்போக்கில் நரம்பியல் இடைமுகம்" மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

Updated On: 22 Feb 2024 3:11 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  7. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  8. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  9. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா
  10. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...