/* */

விருதுநகரில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு-திணறும் மாவட்ட நிர்வாகம்

விருதுநகரில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு-திணறும் மாவட்ட நிர்வாகம்

HIGHLIGHTS

விருதுநகரில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு-திணறும் மாவட்ட நிர்வாகம்
X

தென்மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாள் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக 32, 826 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,164 பேர் குணமடைந்துள்ளனர், 349 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 1010 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சிகிச்சையில் 6315 பேர் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் 48 மட்டுமே காலியாக உள்ள நிலையில் அக்சிஜன் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் அதிக சுவாச பிரச்சனையுடன் சிகிச்சைபெற வேண்டியவர்கள் அண்டை மாவட்டங்களை நோக்கி சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மேலும் அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோவை, மதுரை போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு நிகராக விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updated On: 26 May 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு