/* */

பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியர் பேச்சு

HIGHLIGHTS

பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
X

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு மற்றும் சரவெடி தயாரிப்பது ஆய்வில் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் பட்டாசு தயாரிப்பது குறித்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுதல் தொடர்பான பட்டாசு உற்பத்தியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பட்டாசு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழ்நாடு கேப் வெடி மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கணேசன்,உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி CSRI நீரி அனுமதியோடு பசுமை பட்டாசு தயாரிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும்,மத்திய அரசு பேரியம் நைட்ரேட் குறித்து வல்லுனர்களின் கருத்தை கேட்டுள்ளதாகவும், பேரியம் நைட்ரேட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்பதை உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்து அனுமதி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பேசுகையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தாண்டி மாவட்ட நிர்வாகம் தானாக எதுவும் செய்ய முடியாது என்றும் பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வின் நோக்கம் தண்டனை வழங்குவதற்காக அல்ல, விபத்தை குறைப்பதற்குத்தான் என்றார். வரும் திங்கள் முதல் பட்டாசு ஆலைகளில் ஆய்வு தொடரும் என்றும் ஆய்வின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு செய்தாலோ சரவெடி தயாரித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 20 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  2. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  3. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  4. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  5. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  6. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  8. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  9. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  10. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!