/* */

இயற்கை முறை - நவீன தொழில் நுட்பம்: பப்பாளி சாகுபடியில் அசத்தும் விருதுநகர் விவசாயி

அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் நோக்கி திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவு செய்தார்

HIGHLIGHTS

இயற்கை முறை - நவீன தொழில் நுட்பம்: பப்பாளி சாகுபடியில் அசத்தும் விருதுநகர் விவசாயி
X

விருதுநகர் அருகே சீனியாபுரத்தில்  இயற்கை முறையில் பப்பாளி விவசாயம் செய்யும் விவசாயி அழகர்சாமி

இயற்கை முறையையும் விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் இணைத்து பப்பாளி சாகுபடி யில் அசத்தும் விருதுநகர் விவசாயி

விருதுநகர் அருகே சீனியாபுரத்தில் விவசாயி அழகர்சாமி என்பவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலை கொண்டுஇயற்கை முறையில் பப்பாளியை சாகுபடி செய்து இரட்டிப்பு லாபம் பெற்று வருகிறார்.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது நம் முன்னோர்கள் நோயற்ற நீண்ட ஆயுள் பெற்றிருந்தனர்.அதை உணரத் துவங்கிய இன்றைய தலைமுறையினர் இயற்கையினையினை நோக்கி நகரத் துவங்கி உள்ளனர்.தேவைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. இயற்கையை நோக்கி நம் மக்கள் திரும்ப துவங்கியதால்,இன்றைய விவசாயிகளும் இயற்கை முறையை நோக்கி நகரத் துவங்கி உள்ளனர்.

விருதுநகர் விவசாயி அழகர்சாமியும் இதற்கான தேடலை துவங்கினார்.இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களே சான்றுகள் ஆகி போனதால் அதில் இயற்கை விவசாயம் குறித்து தேடினார்.அவரது தேடலுக்கு யூடியூப்பில் தீர்வு சொன்னார் மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அதையே பின்பற்றி, அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய தன்மைக் கொண்டதும், அதிக வருமானம் ஈட்டுத் தரக்கூடியதும், மேலும் குறைவான பராமரிப்பு கொண்ட ரெட் லேடி பப்பாளி பயிரிட முடிவு செய்தார் அழகர்சாமி.

ஆனால், தண்ணீர் பற்றாக்குறை கொண்ட வானம் பார்த்த பூமியான விருதுநகரில் சாகுபடி சாத்தியம் இல்லை என்ற உண்மை அழகர்சாமியை உறுத்தியது. மாற்றுச் சிந்தனை எப்போதும் மகத்தான வெற்றியை தரும் என்பது மறுக்க முடியாத உண்மை. சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் (rain gun) பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்ய முடிவு செய்தார்.வழக்கமான தேவையில் 70% தண்ணீர் மிச்சமாகும் இந்த தெளிப்பு நீர் பாசனத்தில் மகசூலும் 30% அதிகமாக கிடைக்கிறது.

தெளிப்பு நீர் பாசனம் எனப்படும் இந்த செயற்கை மழை பயிரையும் செழிப்பாக வளரச் செய்கிறது.விலை குறைவு என்பதாலும் பல்வேறு உயிர்ச்சத்துக்கள் கொண்டதாலும் பொதுவாக பப்பாளி விற்பனை மற்ற பழங்களின் விற்பனையை விட அதிகம். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக் கூடிய பழம் பப்பாளி. பப்பாளி இலைகள் டெங்குவை விரட்டும் தன்மை கொண்டதால், அதற்கும் மவுசு இருக்கிறது. விதை முதல் இலை வரை எல்லாமே விலை கிடைப்பவை என்பதால் இரட்டிப்பு லாபம் அடைந்தார் விவசாயி அழகர்சாமி. அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் நோக்கி திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவு செய்தார் இயற்கை விவசாயி அழகர்சாமி.


Updated On: 4 Oct 2021 7:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...