/* */

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி: வணிகவரித்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்..!

சிவகாசியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட, வணிக வரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி: வணிகவரித்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்..!
X

சஸ்பெண்ட்  செய்யப்பட்ட வணிகவரித்துறை பெண் ஊழியர் சித்ராதேவி.

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதேவி (36). இவருக்கும், சிவகாசி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சித்ராதேவி (35) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாண்டிதேவியுடன் சித்ராதேவி நட்புடன் பழகி வந்தார்.

சித்ராதேவி தங்களது அலுவலகத்தில் ஒரு பணியிடம் காலியாக இருப்பதாகவும் அதில் பாண்டிதேவியை சேர்த்துவிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போது தான் பணி நியமன ஆணையை தருவார்கள் என்று சித்ராதேவி கூறியுள்ளார்.

இதனை நம்பிய பாண்டிதேவி, பல தவணைகளாக 4 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாயை சித்ராதேவியிடம் கொடுத்துள்ளார். பணம் பெற்ற சித்ராதேவி, பணி நியமன ஆணை என ஒரு கடிதத்தை பாண்டிதேவியிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற போது தான், சித்ராதேவி கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்று தெரிந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டிதேவி, சித்ராதேவியிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வந்தார். இது குறித்து பாண்டிதேவி, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட சித்ராதேவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றிய தகவல் அறிந்த வணிகவரித்துறை அதிகாரிகள் சித்ராதேவியை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updated On: 20 Aug 2023 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்