/* */

பட்டாசு கடை உரிமம் பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

சாத்தூர் அருகே பட்டாசு கடை உரிமம் பெற வரைபடத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது.

HIGHLIGHTS

பட்டாசு கடை உரிமம் பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
X

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் கதிரேசன்.

சாத்தூர் அருகே பட்டாசு கடை உரிமம் பெற வரைபடத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் (50). இவர் மேட்டமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுக் கடைக்கு உரிமத்திற்கு கட்டிட வரைபட அனுமதி பெற ஊராட்சி செயலாளர் கதிரேசன் (52) என்பவரை அணுகி உள்ளார். இந்த நிலையில் பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதி பெற திருமலைராஜிடம் கதிரேசன் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதனையடுத்து திருமலைராஜ் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் பூசிய ரூ. 20,000 பணத்தை முன்பணமாக திருமலைராஜன் கதிரேசனிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கதிரேசனை கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் பாரதிபிரியா உள்பட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மேட்ட மலை ஊராட்சி மன்றத்தலைவர் பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் ராஜசேகர் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரண்டு பேரின் வீடுகளில் செய்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பட்டாசு கடை கட்டிடத்திற்கு வரை பட அனுமதி பெற லஞ்சம் வாங்கிய கதிரேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்