/* */

உள்ளாட்சிகள் நாள்: காரியாபட்டி பேரூராட்சியில் பேரூர்சபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் பேரூர் சபைக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

உள்ளாட்சிகள் நாள்: காரியாபட்டி பேரூராட்சியில் பேரூர்சபைக் கூட்டம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில்  நடைபெற்ற பேரூர் சபைக்கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்

தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்களை போல நகர சபை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.. இந்த கூட்டங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நேரில் சென்று கவனித்து அவற்றை நிறைவேற்றித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அவை முழு அளவில் செயல்பட்டு வருகின்றன. மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபைக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறலாம். ஒரு கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவருமே இதில் பங்கேற்கலாம். கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகிப்பார்.

இந்நிலையில் கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.

இந்த கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிளில் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் கிராமசபைக் கட்டம் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது . காரியாபட்டி பேரூராட்சி 10வது வார்டில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டம் வார்டு உறுப்பினரும், பேரூராட்சி தலைவருமான செந்தில் தலைமையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பேரூராட்சியில் உள்ள 1வது வார்டில் கவுன்சிலர் லியாகத் அலி, 2வது வார்டில் கவுன்சிலர் ராம்தாஸ், 3வது வார்டில் கவுன்சிலர் முனீஸ்வரி, 4வது வார்டு ரூபி, 5வது வார்டு கவுன்சிலர் முகமது முஸ்தபா 6வது வார்டு கவுன்சிலர் சங்கரேஸ்வரன், 7வது வார்டு கவுன்சிலர் வசந்தா 8வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி 9வது வார்டு கவுன் சிலரசரஸ்வதி 11-வது வார்டு தீபா, 12வது வார்டு கவுன்சிலர் சத்தியபாமா, 13. வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், 14 வது வார்டு கவுன்சிலர் திருக்குமாரி, 15-வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கிராமசபைக்கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்தில், அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, குளியல்தொட்டி, அமைத்தல், பொதுகழிப்பறை மற்றும் வடிகால் வசதி, பகுதி நேர ரேசன்கடை , அங்கன்வாடி மையம் அமைத்தல் குறித்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் செந்தில் பேசும்போது: தமிழக முதல்வர் அறிவிப்பு படி முதன்முறையாக கிராமசபைக் கூட்டங்கள் அனைத்து வார்டுகளிலும் கவுன்சிலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும் . குடிநீர், சாலைவசதி, தெருமின் விளக்கு வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். பேரூராட்சியில், கிராமசபைக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி கொடுத்த கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர். கூட்டத்தில் செயல் அலுவலர் ரவிக்குமார். செயற்பொறியாளர் சுரேஷ், பொறியாளர் கணேசன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

Updated On: 2 Nov 2022 10:30 AM GMT

Related News