/* */

புதிதாக உருவான கோட்டகுப்பம் நகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில், புதியதாக உருவாகியுள்ள கோட்டகுப்பம் நகராட்சிக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

புதிதாக உருவான கோட்டகுப்பம் நகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

கோட்டகுப்பம் நகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டத்தில், கோட்டக்குப்பம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக உள்ளது. தேர்தல்களுக்காக. கடந்த 01.11.2021 நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டமன்ற வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான த.மோகன் இன்று வெளியிட்டார்.

இவ்வாக்காளர் பட்டியல்களின்படி, கோட்டக்குப்பம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 11,581, பெண் வாக்காளர்கள் 12,090 இதர வாக்காளர்கள் 2 ஆக மொத்தம் 23,673 வாக்காளர்கள் உள்ளனர். கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூ.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’