/* */

விழுப்புரத்தில் இன்று வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்

இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காலையிலிருந்தே விழுப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

விழுப்புரத்தில் இன்று வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்
X

 விழுப்புரத்தில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருவதைத் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ள கடைகள் 

விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கஞ்சா போதையில் கத்தியால் குத்தி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று வணிகர்கள் விழுப்புரத்தில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் ஜி ஆர் பி தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் எம்ஜி ரோடு பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை கஞ்சா போதையில் விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு அப்பகுதியில் சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனைத் தட்டிக் கேட்ட நபர்களை தாக்கியும் கத்தியால் தாக்கியும் அச்சுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி அராஜகத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், எம் ஜி ரோடு ஜோதி விருட்சம் பல்பொருள் அங்காடியில் இரண்டு நபர்களும் சண்டையிட்டு கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இப்ராஹிம் என்பவர் இருவரையும் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் இப்ராஹிமை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமுற்று சரிந்து விழுந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் .

இதனை தொடர்ந்து ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் காவல்து றையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் 95 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் விழுப்புரம் எம்.ஜி. ரோடு மார்க்கெட் பகுதி, நேருஜி வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த கடை அடைப்பு போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் அனைவரும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த இப்ராஹிம் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் உள்ளனர். இதனால் விழுப்புரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Updated On: 30 March 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்