/* */

விழுப்புரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு
X

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாடு சனிக்கிழமை விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது, கூட்டத்திற்கு கோட்ட தலைவர்ஆர்.அருள் தலைமை வகித்தார். கோட்ட துணைத்தலைவர் இ.குணசேகர் செங்கொடியை ஏற்றி வைத்தார், முன்னதாக கோட்டசெயற்குழு உறுப்பினர் வி.கே.ஏழுமலை வரவேற்று பேசினார்.

மாநாட்டில் மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.பழனிவேல் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்கவுரையாற்றினார்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன்,ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் எம்.புருஷோத்தமன், திட்ட செயலாளர் ஆர்.சேகர், திட்ட இணைச்செயலாளர் பி.சிவசங்கரன்,டிஎன்பிஇஒ திட்ட செயலாளர் எஸ்.அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்,. 01-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை சிஎல்ஆர் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ,பி.இ படித்தவர்களைக்கொண்டு நிரப்ப வேண்டும்,புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380-ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். மேலும் படிப்படியாக நிரந்தரப்படுத்திடவேண்டும், விஸ்தரிப்பு பணிகளை கே2 அக்ரிமெண்ட் மூலம் பணிசெய்திட வேண்டும். பகுதிநேர ஊழியர்களை நிரந்தரம் படுத்திட வேண்டும். விஸ்தரிப்பு பணி செய்வதற்கு அனைத்து தளவாட சாமான்களையும், தரமாக வழங்க வேண்டும்.பிரிவுகளில் பழுதடைந்த கணினி, பிரிண்டர், உள்ளிட்ட சாதனங்களை மாற்றி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

பின்னர் விழுப்புரம் வினியோக கோட்ட சிறப்பு தலைவராக வி.வெங்கடகிருஷ்ணன், தலைவராக இ‌.முத்துக்குமரன், செயலாளராக ஆர்.அருள், துணைத் தலைவர்களாக ராஜேந்திரன், இ.குணசேகரன், இணை செயலாளர்களாக சத்தியசீலன், கே.ராஜேந்திரனும், விழுப்புரம் கோட்ட தலைவராக ஆர்.சங்கர், செயலாளராக கருணாநிதி, துணைத்தலைவராக ஆர்.பலராமன், இணைச் செயலாளராக பி.விஜயா ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் கோட்ட செயற்குழு உறுப்பினர் டி.பார்த்திபன் நன்றி கூறினார்.

Updated On: 12 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து