/* */

அணையின் கட்டுமான பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்

வீடூர் அணையின் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அணையின் கட்டுமான பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்
X

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடு நீர்த்தேக்கம் திட்டம் வராக நதி மற்றும் தொண்டி ஆறு ஒன்று சேருமிடத்தில் 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வீடூர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் 109 மில்லியன் கன அடிக்கு வண்டல் மண் படிந்து வீடூர் அணை கொள்ளளவு 496 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. என 2009 இல் IHH பூண்டி மூலம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளளவு குறித்து செய்யப்பட்ட ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

வீடூர் அணையின் முழு கொள்ளளவை மீட்டெடுக்க வீடூர் அணை தூர்வாருதல், பிரதான பாசனக் கால்வாய் சிமெண்ட் கான்கிரீட் கால்வாயாக மாற்றுதல், பிரதான பாசன கால்வாய் தூர்வாருதல், பிரதானக் கிளை கால்வாய் தூர் வாருதல், வீடூர் அணையின் கட்டுமானப் பணிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளின் மூலம் ரூபாய் 42.44 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் அரசாணை பெறப்பட்டு பணிகள் துவங்கப்படும் நிலையில், இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...