/* */

உயிர் காக்கும் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது

விழுப்புரம் அருகே சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் ஆக்சிசன் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

HIGHLIGHTS

உயிர் காக்கும் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
X

விழுப்புரம் அருகே உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற அந்த வாகனம் விபத்தில் சிக்கியதால் சாலையில் சிலிண்டர்கள் சிதறிக் கிடந்தன.

மினி வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் செல்லப்பன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோயில் பகுதியில் இருந்து 63 சிலிண்டர்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும்போது

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசூர் என்ற இடத்தில், மினி வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென, இருசக்கர வாகனம் குறுக்கே வந்தது. அதில் மோதாமல் இருக்க வேனின் ஓட்டுநர் வாகனத்தை திருப்பிய போது விபத்து ஏற்பட்டது.

இதில் வேனில் இருந்த, சிலிண்டர்கள் சாலையில் சிதறிக் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் விபத்து ஏற்பட்ட மினி வேனை மீட்டு அப்புறப்படுத்தினர்.

Updated On: 9 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு