/* */

நலவாரியத்தில் பதிவு கட்டணம் செலுத்தாமல் சிறுவணிகர்கள் சேர்ந்து கொள்ளலாம்: அமைச்சர் மூர்த்தி

நலவாரியத்தில் ரூ.500 பதிவு கட்டணம் செலுத்தாமல் சிறுவணிகர்கள்உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் என அமைச்சர் மூர்த்தி கூறினார்

HIGHLIGHTS

நலவாரியத்தில் பதிவு கட்டணம் செலுத்தாமல் சிறுவணிகர்கள் சேர்ந்து கொள்ளலாம்: அமைச்சர் மூர்த்தி
X

வேலூர் கோட்ட அளவில் நடைபெற்ற வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

வேலூர் கோட்ட அளவில் வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வணிகவரித்துறை முதன்மை செயலாளர் ஜோதிநிர்மலா பெரியசாமி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், அண்ணாதுரை, ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., வணிகவரித்துறை கமிஷனர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார்.

இதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களின் பிரநிதிகள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, மூர்த்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வணிகர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும் போது கூறியதாவது:

வணிகர்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க கோட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் வணிகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும். வணிகவரித்துறையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வு காணப்படும்.

3 மாதங்கள் சிறுவணிகர்கள் நலவாரியத்தில் ரூ.500 பதிவு கட்டணம் செலுத்தாமல் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம். இதன்மூலம் வணிகர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும். போலி பில்களை ஒழிக்க வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 1 July 2021 4:43 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!