/* */

பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிய உத்தரவு

தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிவு செய்யவும், தடுப்பு பிரிவினர் கண்காணிக்கவும் உத்தரவு

HIGHLIGHTS

பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிய உத்தரவு
X

தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் . அதனை குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு பிரிவு கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது .

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்கள் , பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது . அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் வரையில் சிக்குகின்றனர். அதோடு பெரும்பாலான காவல் நிலையங்களில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் கொடுத்தல் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் அந்த வழக்கினை சரியாக விசாரிப்பதில்லை என்ற புகார்கள் அடிக்கடி எழுவது உண்டு .

அதேசமயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் குற்றங்கள் , பள்ளிகளில் நடந்த பாலியல் குற்றங்கள் என்று தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது . மேலும் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து ஆன்லைனிலும் புகார்கள் அளித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டால் , அந்த புகார்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இதனை அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர் . அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான புகார்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறதா ? என்று கண்காணித்து வருகிறோம் என்று வேலூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு டிஎஸ்பி சரவணன் தெரிவித்தார்.

Updated On: 19 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...