/* */

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா

ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளி 125.ஆம் ஆண்டு விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டார்

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா
X

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பள்ளியின் 125 ஆம் ஆண்டு நினைவு  கல்வெட்டை திறந்து வைத்தார் 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுமார் 264 மாணவி மாணவர்கள் 1.முதல் 5.பள்ளி கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் திருத்தணி ரெட்டியார், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அபிராமி குமரவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோகுலகிருஷ்ணன், கோல்டுமணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் பரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பள்ளியின் 125 ஆம் ஆண்டு நினைவு வளையத்தையும், மற்றும் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் கலந்துகொண்டு இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர்கள் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பள்ளியில் பேச்சுப்போட்டி, நடன போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், ஓவியம் வரைதல், கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்ற மாணவி மாணவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே. கோவிந்தராஜன், ஊத்துக்கோட்டை துணை காவல்துறை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.


இப்பள்ளிக்கு தேவையான மின்விசிறிகள், நாற்காலிகள், பீரோ உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வழங்கினார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கற்பகம், வட்டார கல்வி அலுவலர்கள் சாது சிங், கல்பனா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜாஜி, வட்டத் தலைவர் செல்வம், பொருளாளர் ஆனந்தன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உதவி ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.

Updated On: 16 April 2023 7:45 AM GMT

Related News