/* */

அருமந்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 12 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்ட அவலம்

வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியத்தால் அருமந்தை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிற்பகல் 12 மணி வரை தேசிய கொடியை ஏற்றப்பட்ட அவலம்

HIGHLIGHTS

அருமந்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 12 மணிக்கு  தேசியக்கொடி ஏற்றப்பட்ட அவலம்
X

அருமந்தை ஊராட்சியில் குடியரசு தினத்தன்று மதியம் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

சோழவரம் அருகே முறையாக பொதுமக்களின்றி கிராம சபை கூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டுவதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார். பிடிஓவின் அலட்சியம் காரணமாக காலை 12மணி வரையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்பட்ட அவலம்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், அருமந்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் அளித்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை அதிகாரம் பிடிஓவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருமந்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிடிஓவின் அலட்சியம் காரணமாக காலை 12மணி அளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் பிடிஓவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கொடிகம்பம் நடுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அங்கு காத்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் 12மணிக்கு பிறகு சவுக்கு மரக்கொம்பு ஒன்றை நட்டு அதில் தேசிய கொடியினை ஏற்றினார்.

இதனிடையே அருமந்தை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்படாமலேயே நடந்ததாக கணக்கு காட்டப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்துள்ளார். நியாய விலை கடைக்கு சென்ற பெண்களை ஏமாற்றி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதாக முறைகேடாக கையெழுத்து பெற்றுள்ளதாகவும், அதிலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றதாக கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.

குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு பெறும் வகையில் தங்களது ஊராட்சியில் முறையாக கிராம சபை கூட்டம் நடைபெற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 26 Jan 2024 11:15 AM GMT

Related News