/* */

போக்குவரத்து நெரிசலால் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பக்தர்கள் அவதி

Periyapalayam Amman Kovil-போக்குவரத்து நெரிசலால் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

Periyapalayam Amman Kovil
X

Periyapalayam Amman Kovil

Periyapalayam Amman Kovil-பெரியபாளையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வந்த வாகனங்களால் 2மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் திணறினர். இதன் காரணமாக புறவழிச்சாலை அமைக்க பல்வேறு தரப்பு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆடி மாதம் 14 வாரங்கள் ஆடி திருவிழா வெக விமரிசையாக நடைபெறும். இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடித்து வேப்பந்தளை ஆடைகளை அணிந்து கோவிலை சுற்றி வலம் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று 2023 ஆம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை பவானி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.அம்மனை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய கார், ஜீப், வேன், பேருந்து என பல்வேறு வாகனங்களில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு படையெடுத்தனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிறியது முதல் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன போக்குவரத்தை சரி செய்ய போதிய அளவில் போலீசார் இல்லாததாலும். அதேபோல் கோவிலுக்கு வரும் வாகனங்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள இடங்களில் நிற்பதற்கு வாகன வரி வசூல் செய்யும் நபர்கள் வாகன வரி வசூலிப்பதற்கு வாகனங்களை சாலைகளில் நிறுத்தி டோக்கன் வழங்கியதாலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை -திருப்பதி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. மேலும் பெரியபாளையம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வயதானவர்கள், குழந்தைகள் போக்குவரத்து நெரிசலால் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இது குறித்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவிக்கையில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்ய வந்தோம். ஆனால் இந்த போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் சிலர் பின் திரும்பியதாகவும் தற்போது மட்டுமல்லாமல் ஆடி மாத காலம் கூட பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்ய வர வேண்டுமென்றால் பெரும் சவால்களை எதிர்கொண்டு தான் சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் தற்போதும் அதே நிலைமை நீடித்து வருவதாகவும் எனவே ஊருக்குள் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் வேறு வழியில் திருப்பி விட வேண்டும் என்றும் அதேபோல் வாகன வரி வசூல் செய்பவர்கள் குறிப்பிட்ட அதற்கான இடத்தில் வாகனம் நிறுத்திய பின்னர்தான் டோக்கன் வழங்க வேண்டும் என்று சாலையில் நின்று வாகனங்களை வழிமறித்து டோக்கன் வழங்குவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் எனவே விழா காலங்களில் இது போன்ற நிலைமைகளை பக்தர்கள் எதிர்கொள்ளாமல கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் எளிமையாக செய்ய வழி வகையை செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புற வழி சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தும் தற்போது அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஊருக்குள் வரும் கனரக வாகனங்களாலும் சாலைகளை சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியதால் சாலை குறுகியது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி வாகனங்கள் பெரியபாளையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 5:56 AM GMT

Related News