Begin typing your search above and press return to search.
உடுமலை பேட்டை அருகே கண்டக்டரை தாக்கிய பயணி கைது
திருப்பூர் அருகே மாஸ்க் அணியாமல் பஸ்ஸில் ஏறக்கூடாது என கூறிய கண்டக்டரை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS

பைல் படம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக, வீதம்பட்டிக்கு, பஸ் எண் 4 இயக்கப்படுகிறது. பெதப்பம்பட்டி பஸ் ஸ்டாப்பில், பயணிகளை ஏற்றியபோது, மாஸ்க் அணியாமல் பஸ் ஏறிய இளைஞரிடம், மாஸ்க் அணியுமாறு கண்டக்டர் மணிஸ் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த இளைஞர், கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பஸ் டிரைவர் சிவராஜ் மற்றும் தன்னையும், அந்த இளைஞர் திடீரென தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கண்டக்டர் மணிஸ் குடிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இலுப்பநகரத்தை சேர்ந்த, கார்த்திக்குமாரை கைது செய்தனர்.