/* */

திருப்பூர் மாநகராட்சி காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?

திருப்பூர் மாநகராட்சியில், பல்வேறு காரணங்களால் நிரப்பப்படாமல் உள்ள 273 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சி காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?
X

திருப்பூர், மாநகராட்சியாக கடந்த 2008 ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது ஆயிரத்து 226 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தற்போது 273 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகவே உள்ளன.

மாநகராட்சி சார்பில் 1074 பணியிடங்கள் நிரப்பி கொள்ள அனுமதிகேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில்,408 பணியிடங்களை நிரப்பி கொள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார். எனினும் அவை நிரப்பப்படாமல் உள்ளதால், பணிகளில் தாமதம் அல்லது பணிச்சுமை உண்டாகிறது.

இது குறித்து, திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சியில் தற்போது 273 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகவே உள்ளன. குறிப்பாக, உதவி கமிஷனர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

கொரோனா தொற்று காரணமாக பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்ட தடை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதித்த 408 மற்றும் காலியாக உள்ள 273 பணியிடங்களை நிரப்ப உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மாநகராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத், ஸ்மார்ட்சிட்டி திட்டம் ஆகிய திட்டப்பணிகளை கண்காணிக்க, இரண்டு செயற்பொறியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 Jun 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!