/* */

விதிமீறும் தொழில் நிறுவனங்களுக்கு சீல்: திருப்பூர் மாநகராட்சி எச்சரிக்கை

திருப்பூரில் இன்று முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பணியாளர்களுடன் இயங்கினால் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

விதிமீறும் தொழில் நிறுவனங்களுக்கு சீல்: திருப்பூர் மாநகராட்சி எச்சரிக்கை
X

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இன்று முதல் 14, ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், ஜாப் ஆர்டர் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன், சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பூரில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் பனியன் கம்பெனிகள் செயல்படுகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த ஊர் சென்று விட்டனர். மீதமுள்ள தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்கி உள்ளனர்.

தற்போது நிறுவனங்கள் இயங்க துவங்கி உள்ளதால், கம்பெனியில் தங்கி உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 சதவீத பணியாளர்களுக்கு மேல், கூடுதல் பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட்டால், சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கான அனுமதி இருந்தால் ஏற்றுமதிக்கான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்பவதற்காகவும் மட்டும் 10 சதவீத பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழிமுறைகளை பின்பற்றி நிறுவனங்கள் இயங்க வேண்டும். மீறினால், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றனர்.

Updated On: 7 Jun 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!