/* */

திருப்பூரில் ஆட்டோக்கள் மோதல்; கல்லூரி மாணவி பலி

திருப்பூரில் 2 ஆட்டோக்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருப்பூரில் ஆட்டோக்கள் மோதல்; கல்லூரி மாணவி பலி
X

இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கல்லூரி மாணவி உயிரிழந்தார் ( கோப்பு படம்)

திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவரது மனைவி சங்காயி (45). இவர்களுடைய மகள்கள் கோகிலா (21), ஜனனி (18).

முருகேசன் தனது குடும்பத்துடன் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ரங்கநாதபுரத்தில் குடியிருந்து வருகிறார். பனியன் தொழிலாளி. இவரது இரண்டாவது மகள் ஜனனி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு, தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக, முருகேசன் தனது மனைவி, மகள்களுடன் புறப்பட்டார். புஷ்பா சந்திப்பு செல்வதற்காக காலேஜ் ரோட்டில், ஆட்டோவை வாடகைக்கு பேசி நான்கு பேரும் ஏறினார்கள். இரவு 9.30 மணி அளவில் ஆட்டோ, ஹவுசிங் யூனிட் பகுதி அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு ஆட்டோ நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவுக்குள் இருந்த ஜனனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகேசன், சங்காயி, கோகிலா ஆகியோரும் காயமடைந்தனர். ஆட்டோ டிரைவரான குணசேகர் (43) என்பவரும் காயமடைந்தார். எதிரே வந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான பூத்தார் தியேட்டர் பகுதியை சேர்ந்த சின்னத்துரையும் (35) காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜனனி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் வடக்கு போலீசார், விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் ஆட்டோ டிரைவர் சின்னத்துரை குடிபோதையில் வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோக்கள் மோதியதில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் கவனத்துக்கு

வாடகை வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் பலரும் குடிபோதையில் வாகனங்களை இயக்கி, விபத்துகளை ஏற்படுத்துவது அடிக்கடி நடக்கிறது. திருப்பூரில், ஆட்டோ டிரைவர்கள் சிலர், இரவு நேரங்களில் மதுபோதையில், இருப்பதாக ஆட்டோக்களில் பயணித்த பலரும் புகார் கூறுவது வாடிக்கையாக உள்ளது. தனிநபர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறாரா, என பரிசோதனை செய்யும் போலீசார், ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாடகை வாகன டிரைவர்களை, கூடுதல் கவனம் செலுத்தி, பரிசோதிக்க வேண்டும். வாடகை வாகனங்களில், அப்பாவி மக்கள் பயணிக்கும் நிலையில், டிரைவர் போதையில் இருக்கும் பட்சத்தில், கல்லுாரி மாணவி உயிரிழந்ததை போன்ற அசம்பாவிதங்கள் தொடர வாய்ப்புள்ளது,

மேலும், இதுபோல் குடிபோதையில் வாடகை வாகனங்களை இயக்கும் டிரைவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

Updated On: 26 Jan 2023 9:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்