/* */

தாராபுரம் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், விநாயகர் சதுர்த்திக்காக அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

HIGHLIGHTS

தாராபுரம் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
X

தாராபுரம் புதிய மேம்பாலத்தின் கீழ், அமராவதி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த பக்தர்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நடப்பாண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் விசர்ஜன நிகழ்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதே நேரம் தனிப்பட்ட முறையில் சிலை வைத்து வழிபட அனுமதி தரப்பட்டது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி நாளான கடந்த 10- ந்தேதி தாராபுரத்தில் உள்ள கோவில்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் , தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டன. அந்த சிலைகளுக்கு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், அவல், பொறி, பழங்கள் படைத்து,பூஜை செய்து பக்தர்களும்,பொதுமக்களும் வழிபட்டனர்.

இந்நிலையில், வீடுகள், தனிப்பட்ட முறையில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள், சிறு களிமண் சிலைகளை வாகனங்களில் எடுத்து சென்று தாராபுரம் அமராவதி ஆற்றில், அகஸ்தீஸ்வரர் கோவில், புதிய மேம்பாலம், சீத்தக்காடு உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கரைத்தனர்.

Updated On: 12 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!