/* */

ஜெயக்குமார் கைது: அரசின் நடவடிக்கையை கண்டித்து  அதிமுகவினர் ஆர்பாட்டம்

திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து  அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஜெயக்குமார் கைது: அரசின் நடவடிக்கையை கண்டித்து  அதிமுகவினர் ஆர்பாட்டம்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கைகளை கண்டித்து அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னையில் கடந்த 19ஆம் தேதி மாநகராட்சி தேர்தலின் போது திமுக சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நரேஷ்குமார் என்பவர் அவரது அடியாட்களுடன் கள்ள ஓட்டு போட முயன்றார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் நரேஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

ஆனால் காவல்துறையினர் கள்ள ஓட்டு போட முயன்ற நரேஷ்குமாரை கைது செய்யாமல், பிடித்த கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காரணம் இல்லாமல் ஜெயக்குமார் மீது திமுக அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்து பிணையில்வரமுடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

இதனால் திமுகவின் கைகூலியாக செயல்படும் காவல்துறையையும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை உடனடியாக விடுதலை செய்து கோரியும், திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகம் முன்பு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி.டி.குமார் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Updated On: 28 Feb 2022 10:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  4. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  6. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  7. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  8. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  9. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  10. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...