/* */

நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் மூன்றாவது நாளாக சோதனை ஓட்டம்

குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரயில் இன்ஜின் மூலம் அதிகாரிகள் குழுவினர் திருச்செந்தூர் செல்கின்றனர்.

HIGHLIGHTS

நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் மூன்றாவது நாளாக சோதனை ஓட்டம்
X

திருச்செந்தூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் 

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18 ஆகிய ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.

இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வருகின்றனர். அவர்கள் மின்சார ரயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள்.

அந்த குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். அந்த குழுவின் ஆய்வு முடிவில் ரயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இன்று இரவு எக்ஸ்பிரஸ் ரயிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 Jan 2024 6:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  3. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  5. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  6. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  7. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  8. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  9. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!