/* */

நெல்லை மாவட்டத்தில் 12 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3500 மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் மாநகர் முழுவதும் 12 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 3553 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் 12 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3500 மாணவர்கள் பங்கேற்பு
X

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நெல்லை மாவட்டத்தில் 12 மையங்களில் நடைபெற்றது. 3500 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) மூலம் கம்பைன்டு ஸ்டேட்டிஸ்டிகல் சப் ஆர்டினேட் போட்டி தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் அன்று முழு ஊரடங்கு என்பதால் அத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 11ஆம் தேதி இன்று நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்ததைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுதும் தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகர் முழுவதும் 12 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 3553 மாணவர்கள் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். தற்போது கொரனோ 3ம் அலை மற்றும் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதன்படி தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் நுழைவாயிலில் தேர்வகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகலும் இத்தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Jan 2022 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்